Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழைய கார் வாங்கும் முன் இத செஞ்ச காரை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

Manoj Krishnamoorthi Updated:
பழைய கார் வாங்கும் முன் இத செஞ்ச காரை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!Representative Image.

கார் வாங்கலாம் என்றால் சிலரிடம் நாம் ஆலோசனை கேட்போம். சிலர் புதிய கார் என்பார்கள் சில யூஸ்டு கார் என்பார்கள். புதிய கார்கள் வாங்குவது என்றால் பெரியளவு தேடல் இருக்காது ஆனால் யூஸ்டு கார் வாங்குவது என்றால் தான் பிரச்சனை வரும். எப்படி வாங்குவது? என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்ற சந்தேகம் உண்டாகும். இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கும் உள்ளதா.. இதோ இந்த பதிவு உங்களான தீர்வு அளிக்கும்.

பழைய கார் வாங்கும் முன் இத செஞ்ச காரை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!Representative Image

எப்படி யூஸ்டு கார் வாங்குவது?

பொதுவாக யூஸ்டு கார் வாங்குவதாக இருந்தால் இன்ஜின் தான் முக்கியம். வண்டியின் தரத்தை இன்ஜினை வைத்தே கணிக்கலாம். இன்ஜின் சரியாக இருந்தால் கார் வாங்க ஏற்றது என்பதை கூறிவிடலாம். தற்போது வரும் வண்டியின்  இன்ஜின் 200000- 400000 வரை சிறப்பாக செயல்படும். இந்த  மாதிரி லேட்டஸ் யூஸ்டு கார் வாங்கினால் பெரும்பாலும் அதிக மெண்டனஸ் செலவு வைக்கும். 

இது பொதுவான கருத்து தான், இந்த கூற்று பெரும்பாலும் 2- 3 ஓனர் கார்களில் தான் பார்க்க வேண்டும். ஆனால் சிங்கிள் ஓனர் கார் அதுவும் வாங்கி சில வருடங்களான கார் வாங்கினால் இன்ஜின் நல்ல கண்டிஷனில் இருக்கும். இதில் சிங்கிள் ஓனர் கார் என எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி உண்டாகும். 

பழைய கார் வாங்கும் முன் இத செஞ்ச காரை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!Representative Image

தற்போதைய டிஜிட்டல் உலகில் இது சாதாரணமான செயலாக மாறிவிட்டது, https://vahan.parivahan.gov.in/ என்ற வெப்சைட் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் வண்டியின் நெம்பரை கொடுத்தால் வண்டிக்கு இதுவரை எத்தனை ஓனர் என்பதை அறிந்து கொள்ளலாம். 

வண்டியின் தரத்தை பார்க்க மெக்கானிக் உதவியை அணுகலாம். அவ்வாறு செய்ய முடியாத தகுந்த அதிகாரிகள் காரின் தரத்தை சோதித்து சர்ட்டிவிக்கட் அளிக்கும் வசதி தற்போது ஆட்டொமொபைல் மார்க்கெட்டில் உள்ளது. இதை பயன்படுத்தினால் காரின் தரத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்