Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இந்தியாவிலே வாகன உதிரி பாகங்கள் தயாரிக்க தீவர முயற்சி...!

Manoj Krishnamoorthi Updated:
இனி இந்தியாவிலே வாகன உதிரி பாகங்கள்  தயாரிக்க தீவர முயற்சி...!Representative Image.

கார் பைக் போன்ற ஆட்டோமொபைல்  நிறுவனங்கள் தங்களின் எலக்ட்ரிக் படைப்பை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. பெட்ரோல் டீசல் வாகனத்தில் இருந்து எலக்ட்ரிக் வாகனத்தை சிலர் ஏற்றுக் கொள்ள யோசித்தாலும் பலர் இதை ஆர்வமாக வரவேற்க தொடங்கினார். குறைவான மெயிண்டனஸ் எலக்ட்ரிக் வாகனத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ளது.  

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு குறைந்த செலவ் அளிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும். இதன் உதிரி பாகங்கள் அயல்நாட்டில் இருந்து இறுக்குமதி செய்வதால் கொஞ்சம் காஸ்டிலியாக தான் உள்ளது.  இந்த உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் முழு முயற்சியில் வருகிறது.  அயல்நாட்டில் இருந்து இறுக்குமதி செய்வதை குறைக்க மாற்று வழி முயல தீவரம் காட்டி உள்ளதாக தெரியவருகிறது. 

இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்  கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பிடிஐ செய்தி நிறுவனத்தில் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்  கூட்டமைப்பு (ACMA), இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு  ,இணைந்து உள்நாட்டிலே உதிரி பாகங்களை தயாரிக்க திட்டமிட்டதாக கூறினார்.

இந்தியாவிலே எலெக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டால் இறுக்குமதி செலவு குறையும்.இனி வரும் காலங்களில் வாகனங்களின் தேவை அதிகரிக்க உள்ளதால் இந்த உதிரி பாக தயாரிப்பு முறை ஏற்றதாகும். 

எலக்ட்ரிக்  வாகன பயன்பாடு அதிகரிக்க உள்ளதால் எலக்ட்ரானிக் பொருட்கள் தேவை அதிகரிக்கும், அதேவேளையில் உள்நாட்டிலே தயாரித்தால் தொழில் வாய்ப்பை உருவாக்கும் என பேட்டியில்  சஞ்சய் கபூர் தெரிவித்தார்.

எலெக்ட்ரானிக் பாக உற்பத்தியை ஊக்குவிப்பதால் தற்போதைய நிதியாண்டு இறுக்குமதி செலவு ரூ. 79,815 செலவு போல அதிகரிக்காது. இந்த உதிரிபாக உற்பத்தியை இவர் முன்வைக்க காரணம் கடந்த ஆண்டு இறுக்குமதியை விட 17.2% சதவீதம் அதிகரித்துள்ளது ஆகும். எனவே, இனி வரும் காலத்தில் இறுக்குமதி செலவை குறைக்கவே ஆட்டோமொபைல் தொழில்துறை கூட்டாக உதிரிபாக உற்பத்தியில் தீவரம் காட்டுவதாக கூறியுள்ளார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்