Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

Kawasaki Ninja H2 SX வந்தா Ducati பைக்கை ஓரம்கட்டிரும் போல..!

Manoj Krishnamoorthi Updated:
Kawasaki Ninja H2 SX வந்தா Ducati பைக்கை ஓரம்கட்டிரும் போல..!Representative Image.

Kawasaki பைக்கின் ஈசியான டிரைவிங் மாடல் பைக் பிரியர்களுக்கு எப்போதும் Kawasaki பைக்கின் மீது ஒரு கிரேஸை உருவாக்கி உள்ளது.  நல்ல டிஸ்பிளேஸ்மண்ட் மற்றும் லைட் வெயிட் கொண்ட Kawasaki பைக்கின் செயல்பாடு பைக்கர்ஸ் மத்தியில் பிரபலமாகும்.  இந்த பதிவில் 998cc பைக்கான Kawasaki Ninja H2 SX யின் லேட்டஸ் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

Kawasaki Ninja H2 SX வந்தா Ducati பைக்கை ஓரம்கட்டிரும் போல..!Representative Image

Kawasaki Ninja H2 SX

ஜப்பானில் பிரபல நிறுவனமான Kawasaki 1954 முதல் ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியில் தொடங்கி தற்போது வரை  உலகமெங்கும் பிரபலமடைந்துள்ளது. இந்தியாவில் 2009 இல் பைக் விற்பனையை தொடங்கிய Kawasaki  பைக்கள் குறைந்த எடையில் நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. சுமார் 28 லட்சம் மதிப்புள்ள 998 cc பைக்கான Kawasaki Ninja H2 SX கம்போர்ட்டான ரைடு அளிக்கும். 

4 சிலிண்டர் 998 cc இன்ஜின் கொண்ட Kawasaki Ninja H2 SX 197.2 bhp பவரை 137.3 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. 3.1 s யில் 0- 100 செல்லும் திறன் கொண்ட Kawasaki Ninja H2 SX பைக்கின் அதிகபட்ச வேகம் 331 kmh ஆகும். 43mm இன்வெர்ட்டடு ஃபிரண்டு ஃபோர்க் பைக்கிற்கு அருமையான சஸ்பென்ஷன் அளிக்கிறது. 

ஜூன் 2023 முதல் விற்பனைக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில் bidirectional quick shifter மற்றும் சலிப்பர் கிளட்ச் மெக்கனாசிம் கொண்டுள்ளது. 6.5 இன்ச் TFT டிஸ்பிளெ, டைர் பிரஸ்ஸர் மானிட்டர் சிஸ்டம், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், பவர் மோடுஸ், எமர்ஜன்ஸி ஸ்டாப் சிக்கனல் போன்றவை  நமக்கு பாதுகாப்பான வசதிகளாக உள்ளது. 

3 கலர் வேரியண்டில் சிங்கள் கலர் காமினேஷன் டிசைனில் Ninja H2 SX பைக் உருவாகியுள்ளது. மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள நீளமான விண்ட் ஸ்கீரின்  மற்றும் பெரிய 19 லிட்டர் பெட்ரோல் டெங் நமக்கு அருமையான பயணத்தை அளிக்கும். 

190kg எடை கொண்ட Ninja H2 SX பைக்கின் விற்பனை Ducati Supersport 950, BMW S 1000 RR, Ducati Panigale V4 போன்றவற்றிற்கு போட்டியாக அமையும். டூயல் ABS சிஸ்டம் கொண்ட Ninja H2 SX யின் விலை 23.50- 28.19 லட்சமாக இருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்