Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

கியாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 541கிமீ ரேன்ஜ் தரும்.. | Kia EV9 Price in India

Nandhinipriya Ganeshan Updated:
கியாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 541கிமீ ரேன்ஜ் தரும்.. | Kia EV9 Price in IndiaRepresentative Image.

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. நிறுவனம் இதுவரை உருவாக்கியதிலேயே, அளவு அடிப்படையில் நீளமான கார் இதுவாகும். அதாவது, மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் வடிவில் கிடைக்கிறது. முற்றிலும் புதுமையாக பார்ப்பதற்கே ஸ்டாலான லுக்கியில் இருக்கும் இந்த கியா EV9 மாடல் முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 541 கிலோமீட்டர்கள் வரை ரேன்ஜ் தருகிறது. 

இந்த ரேன்ஜ் WLTP பரிசோதனையில் கிடைத்த முடிவுகளே. இருப்பினும், அன்றாட பயன்பாடுகளின் போது வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் காரின் ரேன்ஜ் வேறுப்படலாம். இத்துடன் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 239 கிமீ வரை பயணிக்க முடியும்.

Kia EV9 டைமென்ஸன்:

அளவீடுகளை பொறுத்தவரை, காரின் நீளமானது 5 மீட்டருக்கும் அதிகமாகவே உள்ளது. HMG-யின் பிரத்யேக பேட்டரி எலெக்ட்ரிக் வாகன (BEV) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கார் இதுவாகும். 1,980மிமீ அகலமும், 1,750மிமீ உயரமும், 3,100மிமீ வீல்பேஸும் கொண்டுள்ளது. இந்த மாடலின் பூட் 4/5 சீட்டர் மாடலில் நிமிர்ந்து இருக்கும் போது 828 லிட்டர் அளவுக்கு ஸ்டோரேஜ் வசதியை வழங்குகின்றன. அதேசமயம், இதன் 6/7 சீட்டர் மாடலில் இருக்கைகள் நேராக இருக்கும் போது 333 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

காரைச் சுற்றி 15 சென்சார்கள் உள்ளன. இதில் இரண்டு ஹைடெக் LiDAR சென்சார்கள் முன்பக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சுற்றுப்புறத்தை வரைபடமாக்குகின்றன. இவை, மற்ற காரில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்க உதவுகிறது.

கியாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 541கிமீ ரேன்ஜ் தரும்.. | Kia EV9 Price in IndiaRepresentative Image

Kia EV9 ரேன்ஜ் & பேட்டரி:

மேலும், இந்த எலெக்ட்ரிக் கார் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களும் கியாவின் நான்காம் தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்துடன் 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் வருகின்றன. ரியர்-வீல் டிரைவ் வேரியண்டில் 150 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 350Nm டார்க் இழுவிசையையும், 215hp பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 185 கிமீ வேகத்தில் செல்லும் இந்த மாடலானது 0-விலிருந்து 100 கிமீ வேகத்தை 9.4 வினாடிகளில் எட்டிவிடும். 

அதேபோல், ஆல்-வீல் டிரைவ் வேரியண்டில் உள்ள மோட்டார், அதிகபட்சமாக 600Nm டார்க் இழுவிசையையும், 380hp பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலானது 0-விலிருந்து 100 கிமீ வேகத்தை 6.0 வினாடிகளில் எட்டிவிடும். அது போதுமான வேகம் இல்லை என்றால், நீங்கள் Kia Connect ஸ்டோரிலிருந்து "பூஸ்ட்" செயல்பாட்டை வாங்கிக் கொள்ளலாம். இது டார்க் இழுவிசையை 700Nm ஆக அதிகரிக்கும். இதன் மூலம் வெறும் 5.3 வினாடிகளில் அதிகபட்ச வேகத்தை எட்டிவிடும்.

கியாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 541கிமீ ரேன்ஜ் தரும்.. | Kia EV9 Price in IndiaRepresentative Image

Kia EV9 சார்ஜிங்:

கியா EV9 மாடலை 800-வோல்ட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட் அதிகபட்சமாக 239 கிமீ வரை செல்லும். அதேசயம் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் 219 கிமீ வரை செல்லும். 

விலை & வெளியீட்டு தேதி: 

முற்றிலும் புதுமையான கியா எலெக்ட்ரிக் எஸ்யூவி 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து கொரிய சந்தையில் முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கும். மேலும், விலை ஜூலை மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்