Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

KIA EV6 Booking Start: தொடங்கியது கியா இவி6 புக்கிங்...அறிமுக தேதியும் அறிவிப்பு..!

madhankumar May 26, 2022 & 14:31 [IST]
KIA EV6 Booking Start: தொடங்கியது கியா இவி6 புக்கிங்...அறிமுக தேதியும் அறிவிப்பு..!Representative Image.

இந்தியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கியா இவி6 எலக்ட்ரிக் காரின் புக்கிங் தொடங்கியுள்ளது. இந்த காரை வாங்க பலரும் ஆறாவதாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த காரை வாங்குவதற்கு முன்னர் இந்த கார் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்த கியா நிறுவனமானது தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் அதன் முதல் எலக்ட்ரிக் காரான கியா இவி 6 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு தொகையாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு:

இந்த கியா இவி6 எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் காருக்கான முன்பதிவை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட 15 ஷோரூம்களில் செய்துகொள்ளலாம் அல்லது கியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரன் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. 

இந்த கார் அறிமுகமாகும் போது தான் இதன் எக்ஸ் ஷோரூம் விலை குறித்து தெரிவிக்கப்படும். இந்த கியா இவி 6 எலக்ட்ரிக் காரனது முற்றிலுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் இந்த காருக்கான வரி அதிகமாக இருக்கும் ஆதலால் இதன் விளையும் கணிசமாக உயர்ந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கியா இவி6 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்வது குறித்து எந்த ஒரு முடிவையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வெறும் 100 யூனிட்டுகள் மட்டுமே முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா இவி6 எலக்ட்ரிக் கார் சிறப்பம்சங்கள்:

இந்த கரானது ஜிடி மற்றும் ஜிடி லைன் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஜிடி வெறியர் பின் சக்கர இயக்க அமைப்பை கொண்டதாக உள்ளது. ஜிடி லைன் வெறியர் அணைத்து சக்கர இயக்கத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜிடி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 229 பிஎச்பி & 350 என்எம் டார்க் திறன் வரையிலும், ஜிடி லைன் வேரியண்ட்டில் 347 பிஎச்பி & 605 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

இந்த இவி6 ஆனது 0-வில் இருந்து 100KMPH வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டக்கூடியதாகும். அதிகபட்சமாக இந்த கார் 192KMPH வேகத்தில் பயணிக்கக்கூடியது. இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய இருவிதமான சார்ஜர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று 50 கிலோவாட்ஸ் & 350 கிலோவாட்ஸ் திறன்களில் வழங்கப்பட உள்ளன.

விலை விவரங்கள்:

இந்த கியா இவி6 எலக்ட்ரிக் காரின் தோராய எக்ஸ் ஷோரூம் விலை ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடப்பு 2022ஆம் வருடத்தில் அறிமுகமாகும் முதல் எலக்ட்ரிக் கார் இவி6 ஆகும்.

கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான டா-ஜின் பார்க் இந்த காரின் அறிமுகம் குறித்து கூறுகையில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது மெல்ல மெல்ல மாற்றம் அடைந்துவருகிறது. இந்த மாற்றத்தில் முன்னிலை பங்குவகிப்பது கியா என குறிப்பிட்டுள்ளார்.எங்களின் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபித்துள்ளோம் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்