Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் எப்படி இருக்கும் | Harley Davidson x440

Abhinesh A.R Updated:
குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் எப்படி இருக்கும் | Harley Davidson x440Representative Image.

ஹார்லி டேவிட்சன் என்றாலே அதிக விலை இருக்கும் என்று தான் மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், இந்திய வாகன நுகர்வோரில் உள்ள நடுத்தர பயனர்களுக்காக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததோ.. என்னவோ ஹார்லி. இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ உடன் கூட்டு சேர்ந்து தனது முதல் விலை மலிவான ரெட்ரோ பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய பைக் ஜூலை 4 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வண்டியின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிய பல பயனர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஹீரோ மோட்டோகார்ப், ஹார்லி-டேவிட்சன் தயாரிப்பில் வந்துள்ள X440 ரோட்ஸ்டெர் பைக் என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தனித்துவமான டிசைன், பல மேம்பட்ட அம்சங்கள் இதில் அடங்கி இருக்கும் என பைக் ஆர்வலர்கள் சிலாகித்து வருகின்றனர். தற்போது இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பைக் குறித்த அம்சங்களை பார்க்கலாம்.

குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் எப்படி இருக்கும் | Harley Davidson x440Representative Image

ஹார்லே டேவிட்சன் எக்ஸ்440 ரோட்ஸ்டர்

துல்லியமான நேர்த்தியான டிசைன் அம்சங்களை கொண்டதாக புதிய மிட்ரேஞ் பட்ஜெட் ஹார்லி பைக் இருக்கிறது. இதில் 440சிசி ஆயில் கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றதாக விளங்குகின்ற எக்ஸ்440 பைக்கில் எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பல அம்சங்களை இது கொண்டிருக்கும் என்பதால், பைக் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வட்ட வடிவிலான எல் இ டி ஹெட்லைட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் கொண்டு செலுத்தப்படுகிறது. ஆனால் என்ஜின் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

எக்ஸ்440 பைக் ட்யூப்லெர் ஃபிரேம் கொண்டு முன்புறத்தில் 18” இன்ச், பின்புறத்தில் 17” இன்ச் அலாய் வீல் கொண்டுள்ளது. இதனுடன் யூஎஸ்டி ஃபோர்க், ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ஜூலை 4 முதல் இந்திய சாலைகளை முத்தமிட அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் எப்படி இருக்கும் | Harley Davidson x440Representative Image

ஹார்லி டேவிட்சன் X440 டீசர்

இதனிடையில் நிறுவனம் புதிய ஹார்லி பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் பைக்கின் தோற்றம், மற்றும் சத்தம் தெளிவாக தெரிகிறது. ஆஃப் ரோடு, ரெட்ரோ மைக்களுக்கு ஏற்ற சத்தத்தை இந்த பைக் வெளிப்படுத்துகிறது. இது பைக் பிரியர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. எப்போது பைக் வரும், எப்போ வாங்கலாம் என பல வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்