Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!

Abhinesh A.R Updated:
பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image.

வாகனத் துறையில் பெரும் போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், நிறுவனங்கள் தொடந்து பைக்குகளை வெளியிட்டு வருகிறது. இதில் சில நிறுவனங்கள் காணாமல் போன கதையும் உண்டு.

சில நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வாகனங்களை அறிமுகம் செய்யும். அப்படிப்பட்ட சில பைக்குகள் தற்போது எங்குள்ளது என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த செய்தியில் அப்படி மாயமான பைக்குகளின் தொகுப்பை தான் பார்க்க இருக்கிறோம்.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர்

CBF Stunner 125சிசி செக்மென்டில் அறிமுகம் செய்யப்பட்ட பைக் ஆகும். மோசமான திறனுடன் சந்தையின் போட்டியை தாக்குப்பிடிக்க முடியாமல் 2014ஆம் ஆண்டில் இந்த பைக்குக்கு மூடு விழா நடத்தியது ஹோண்டா.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

பஜாஜ் பல்சர் 135 எல்.எஸ்

குறைந்த விலை பல்சர் பைக் என்ற பெயருடன் சந்தையில் களம்கண்ட இந்த பைக் நிறைய நாள் தாக்குப்பிடிக்கவில்லை. மோசமான விற்பனை நிலையைத் தொடர்ந்து 2018-இல் இந்த பைக்கை தயாரிக்கும் பணிகளில் இருந்து பஜாஜ் பின்வாங்கியது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

எல் எம் எல் அட்ரினோ

LML நிறுவனம் 1999 வாக்கில் அறிமுகம் செய்த பைக் தான் அட்ரினோ. 8.5 குதிரைத் திறன், 110சிசி எஞ்சின் கொண்டிருந்த இந்த பைக், விற்பனை சரிவின் காரணமாக கைவிடப்பட்டது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

ஹோண்டா கிளிக்

இந்தியாவில் ஹிட்டடிக்கும் என நினைத்து வெளியிடப்பட்ட இந்த பைக் பெரிதாக ஒன்றும் சந்தையை ஆச்சரியப்படுத்தவில்லை. 2020-21 காலத்தில் உள்ள 7 மாதத்தில் வெறும் ஒரு வாகனம் மட்டுமே விற்றுள்ளது. 2020-இல் இந்த வாகனத்தின் தயாரிப்பை ஹோண்டா நிறுத்தியது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

யமஹா லிபெரோ

யமகாவின் பெரும்பாலான அனைத்து பைக்குகளும் ஹிட் அடித்துள்ளன. பழைய RX100 முதல் இப்போதைய R15 வரை பல பைக்குகள் நல்ல விற்பனையை நிறுவனத்திற்கு ஈட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், லிபெரோ விஷயத்தில் யமஹா தோல்வியைச் சந்தித்தது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

சுஸூகி இண்ட்ரூடர் 150

உலகளவில் பிரபலமான இண்ட்ரூடர் 1800 பைக்கை இந்தியாவில் 150cc திறனில் சுஸூகி நிறுவனம் கொண்டுவந்தது. ஐந்து வருடம் தாக்குப்பிடித்ததைத் தொடர்ந்து, விற்பனையில் தொய்வு இருந்ததால், 2017ஆம் ஆண்டு அதன் தயாரிப்பை நிறுவனம் நிறுத்தியது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

எல் எம் எல் ஃப்ரீடம்

2002ஆம் ஆண்டு 110சிசி திறன்கொண்ட எல் எம் எல் ஃபிரீடம் பைக் அறிமுகமானது. ஆனால், குறைந்த திறன், விற்பனையில் மந்தம் ஆகிய காரணங்களுக்காக 2018ஆம் ஆண்டு நிறுவனமே திவாலானது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

ஹோண்டா நேவி

உலக சந்தையில் வெற்றிக்கண்ட இந்த குட்டி பைக் இந்திய மக்களை கவரும் என ஹோண்டா நிறுவனம் நினைத்தது. ஆனால், குறைந்த அளவே பதிவுகள் இருந்ததால், 2020ஆம் ஆண்டில் இதன் தயாரிப்பை நிறுத்தியது நிறுவனம்.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

ஹீரோ இம்பல்ஸ்

2008ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆஃப் ரோடு ஸ்போட்ஸ் பைக் இந்தியர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இதை 2016-இல் நிறுத்திய நிறுவனம், Xpulse எனும் புதிய மாடலை அறிமுகம் செய்து தற்போது சந்தையில் போட்டியை சமாளித்து வருகிறது.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

ராயல் என்ஃபீல்டு மேசிஸ்மோ

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பெரும் தோல்வி இதுதான். 350சிசி கொண்ட மேசிஸ்மோ பைக் விற்பனை சரிவின் காரணமாக நிறுத்தப்பட்டது. கிளாசிக்கை விட படுபயங்கர தோற்றம் இருந்தும், இந்த பைக்கால் சந்தையில் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

சுஸூகி இனாசுமா 250

பெரிய எதிர்பார்ப்புடன் அதிக வசதிகளைக் கொண்டு களமிறங்கிய இந்த வாகனமும் பெரிதாக போகவில்லை. 248சிசி டிவின் சிலிண்டர் எஞ்சின், 6 கியர்பாக்ஸ் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். ஆனால், சில காரணங்களுக்காக இந்த பைக்கை மக்கள் விரும்பவில்லை.

பெரிய பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பைக்குகள்!Representative Image

மஹிந்திரா மோஜோ

அதிக திறன் கொண்டு வெளியிடப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் லுக் பைக் இது. 295சிசி எஞ்சின், 26.8எச்பி பவர், 30என்எம் டார்க் போன்ற பல திறன்வாய்ந்த அம்சங்கள் இருந்தும் சந்தையில் நல்ல இடத்தை பிடிக்கவில்லை. 2020-இல் நிறுவனம் இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் வெளியிட்டது. அதுவும் எந்த முன்னேற்றத்தையும் விற்பனையில் ஏற்படுத்தவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்