Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Mahindra XUV 400 ev காரின் புக்கிங் எப்போ இருந்து ஆரம்பம் தெரியுமா....!

Manoj Krishnamoorthi Updated:
Mahindra XUV 400 ev காரின் புக்கிங் எப்போ இருந்து ஆரம்பம் தெரியுமா....!Representative Image.

ஆட்டோமொபைல் நிறுவனத்தின் திருவிழா என்றால் ஆட்டோ எக்ஸ்போ தான். உலகமே லாக்டவுனில் இருந்ததால் அட்டோ எக்ஸ்போ தள்ளி வைக்கப்பட்டது. அந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 ஜனவரி 13- 18 வரை டெல்லி மற்றும் நொய்டாவில் நடந்தது. இந்த கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்களின் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மகேந்திர காரில் பிரபலமான XUV டைப்பில் புதிய எலக்ட்ரிக் ரக XUV 400  அறிமுகம் செய்யப்பட்டது. 

எலக்ட்ரிக் வாகனமான XUV 400 கார் Tata Nexon EV மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15.99- 18.99  லட்சம் ஆகும்.  0-100 km வேகம் எடுக்க 8.3 வினாடியே போதும் போன்ற தகவல்கள்  இந்த  புக்கிங் எப்போது ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்க வைத்தது. இந்தியாவில் XUV 400 காரின் புக்கிங் ஜனவரி 26, 2023 முதல்  ஆரம்பிக்க உள்ளது.   

பாதுகாப்பு தரப்பில் 6 ஏர்பேக், ISOFIX சைல்டு சீட் பெல்ட், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் போன்றவை நமக்கு XUV 400 ev மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதிக பட்சம் 150 kmph வேகம் செல்லும் எலக்ட்ரிக் கார் என்பது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்