Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்

Abhinesh A.R Updated:
எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image.

இந்திய கார் ஆர்வலர்கள் மத்தியில் டீசல் வாகனங்கள் எப்போதும் நல்ல பெயரைப் பெற்றுள்ளன. முக்கிய காரணம் எரிபொருள் நுகர்வு தான். டீசல் வாகனங்கள் அதிக மைலேஜ் தருவதால் வாடிக்கையாளர்களிடம் அதிக தேவை உள்ளது.

எலெக்ட்ரிக் கார்களின் வருகைக்குப் பிறகு, டீசல் கார்களுக்கு சந்தை கொஞ்சம் கொஞ்சமாக கருணை இழந்துவிட்டது. இருப்பினும், டீசல் கார்கள் மிகவும் திறமையான  ஆட்டோமேடிக் வேரியண்டுகளில் கிடைக்கின்றன. எனவே கார் வாங்குபவர்களும் அதைக் குறித்து கருத்தில் கொள்ளலாம்.

உங்களுக்காக சிறந்த ஆட்டோமேடிக் டீசல் கார்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். உங்களுக்குப் பிடித்த கார்களை மனதில் வைத்து அவற்றை வாங்கும் போது சிறந்த முடிவை எடுங்கள்.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

மஹிந்திரா ஸ்கார்பியோ என்

ஸ்கார்பியோ என் Z4 டீசல் 2 வீல் டிரைவ் 7 சீட்டர் 2184 cc, ஆட்டோமேட்டிக், 172 bhp எஸ்யூவி கார் ரூ.17.11 லட்சம் விலையிலும், ஸ்கார்பியோ என் Z6 டீசல் 2 வீல் டிரைவ் 7 சீட்டர், 2184 cc,  ஆட்டோமேட்டிக், 172 bhp வண்டி ரூ.18.01 லட்சமாகவும் விற்பனைக்கு உள்ளன.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

கியா செல்டாஸ் டீசல் ஆட்டோமேட்டிக்

கியா செல்டாஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட மாடலில் புதிதாக 6 ஸ்பீடு iMT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கி இருக்கிறது.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

டாடா நெக்ஸான் டீசல் ஆட்டோமேட்டிக்

டாடா ஆட்டோமெட்டிக்1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்டுடன் சந்தையில் உள்ளது. டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 முதல் தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 டீசல்

எக்ஸ்யூவி700 ax3 டீசல் ஏடி 2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல், ரூ.18.90 லட்சத்திற்கும், எக்ஸ்யூவி700 ax5 டீசல் ஏடி ரூ.20.28 லட்சத்திற்கும், டாப் வேரியண்ட் எக்ஸ்யூவி700 ax7 டீசல் ஏடி லக்‌ஷரி ஏடபிள்யூடி 2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல் ரூ.26.18 லட்சத்திற்கும் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு அதிகபடியான தேர்வை மஹிந்திரா வழங்குகிறது. மொத்தம் 7 வேரியண்டுகள் இதில் அடங்கும்.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

மஹிந்திரா தார் டீசல்

தார் LX Convertible Top Diesel AT 4WD 2184 cc, 130 bhp, ஆட்டோமேட்டிக் ஆஃப்ரோடு கார் ரூ.16.68 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனைக்கு உள்ளது.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

கியா சோனெட் டீசல் ஆட்டோமேட்டிக்

இதன் மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன் அனைத்தும் நீக்கப்பட்டு தற்போது 1.5 லிட்டர் டர்போ டீசல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் iMT கியர் வசதியுடன் வருகிறது. மேம்படுத்தப்பட்ட 2023 டீசல் மாடலை பொறுத்தவரை 50 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எந்த கார் வாங்க போறீங்க - சிறந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல்Representative Image

ஹுண்டாய் கிரெட்டா டீசல் ஆட்டோமேடிக்

கிரெட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி 1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல் விலை ரூ.19 லட்சமாக உள்ளது. கிரெட்டா எஸ்எக்ஸ் opt knight டீசல் ஏடி 1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல் ரூ.19.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்