Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Maruti Suzuki Baleno: பாதுகாப்பில் BEST விற்பனையில் WORST....மாருதி சுஸுகி-க்கு வந்த நிலைமையை பாருங்க..!

madhankumar May 17, 2022 & 12:15 [IST]
Maruti Suzuki Baleno: பாதுகாப்பில் BEST விற்பனையில் WORST....மாருதி சுஸுகி-க்கு வந்த நிலைமையை பாருங்க..!Representative Image.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த நடப்பு ஆண்டில் அதன் விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

மாருதி சுஸுகி பலேனோ:

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (maruti suzuki baleno). இந்த காருக்கு ஏற்கனவே ஒரு மாடல் இருந்தபோது அதன் அட்டகாசமான புதிய அப்டேட் செய்யப்பட்ட பலேனோ 2022 மாடலை நடப்பாண்டு பிப்ரவரி இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த மாருதி சுஸுகி பலேனோ புதிய மாடலில் பழைய மாடலைக்காட்டிலும் ஏராளமான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு பாலையா மாடலைக்காட்டிலும் மிகசிறந்த தேர்வாக மாறியுள்ளது. அப்படி இருந்தாலும் மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலேனோ விற்பனை விபரம்:

இந்த மாருதி சுஸுகி பலேனோ 2022 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 10,938 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி பலேனோ கார்களின் விற்பனை எண்ணிக்கை 16,384 ஆக இருந்தது. இதனால் இந்த கார் விற்பனை கடந்த ஆண்டைவிட 33.24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வருடாந்திர விற்பனையில் தான் இந்த கார் விற்பனை விகிதம் சரிவை சந்தித்துள்ளது என நினைத்தால் மாதாந்திர விற்பனையிலும் இந்த கார் சரிவையே சந்தித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,520 பலேனோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 10,938 ஆக சுருங்கியுள்ளது. இது 24.67 சதவீத வீழ்ச்சியாகும்.

புதிய மாருதி சுஸுகி காரின் சிறப்பம்சம்:

புதிய மாருதி சுஸுகி பலேனோ 2022 காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 PS பவரையும், 113 NM டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு AMD கியர் பாக்ஸ் தேர்வுகள் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

கார் இன்டீரியர் கட்டமைப்பு:

360 டிகிரி பார்க்கிங் கேமரா, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சுஸுகி கனெக்ட், போன்ற வசதிகள் இந்த மாருதி சுஸுகி பலேனோ காருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் பேசப்படக்கூடியவையாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

இந்த மாருதி சுஸுகி பலேனோ கார் தந்து டாப் வேரியண்ட்களில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, பிரேக் அஸிஸ்ட், ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

பலேனோவுக்கு போட்டியாக உள்ள நிறுவனங்கள்:

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோவிற்கு ஏகப்பட்ட போட்டி நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20, மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. இதில், டொயோட்டா க்ளான்சா காரானது, மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி நிறுவனம் தன சிஎன்ஜி கார்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இதனை தக்கவைத்துக்கொள்ளவே மாருதி நிறுவனம் பல புதிய சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவரஉள்ளது. அதில் இந்த பலேனோ சிஎன்ஜி காரும் ஒன்றாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்