Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023

Gowthami Subramani Updated:
2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image.

பைக் பிரியர்களைக் கவரும் விதமாக, தற்போது பைக் நிறுவனங்கள் டூவிலர்களை வெளியிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புது புது மாடல்களை வெளியிட்டு புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும் பைக்குகளை வெளியிடுகின்றனர். பைக் பிரியர்கள் மிகக் குறைவான விலையில் பைக் வாங்குவதையே விரும்புவர். அதே சமயம், பைக்கின் மைலேஜ், எடை, உள்ளிட்டவற்றையும் பார்க்க வேண்டும்.

குறைவான பட்ஜெட்டில்

பைக் பிரியர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களுடன் கூடிய, குறைவான பட்ஜெட்டில் உள்ள டூவிலர்களை வாங்க விரும்புவர். அதன் படி, இந்த 2023 – 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட உள்ள 1 முதல் 2 லட்சம் தொகை வரையிலாக வரவிருக்கும் டூவீலர்களின் பட்டியலை இந்தப் பதிவில் காணலாம்.

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image

2 லட்சத்திற்கும் கீழ் உள்ள டூவீலர்களின் பட்டியல்

Suzuki Burgman Electric

சுசுகி எலக்ட்ரிக் இருசக்கர நிறுவனம், தனது முதல் Electric Vehicle குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடிவைப்பு வாரியாக, சுசுகி பர்க்மேன் எலக்ட்ரிக் பைக் அட்டகாசமான அமைப்பைக் கொண்டிருக்கும். இது Telescopic fork, 12-இன்ச் Alloy wheel up front ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதன் பின்புறமானது Twin Shock Absorber Setup-ஐப் பயன்படுத்துகிறது. இந்த பைக்கின் பின்புறத்தில் இருக்கும் சக்கரம் சிறியதாக, drum brake மற்றும் CBS உடன் 10-இன்ச் யூனிட்டில் இருக்கும்.

இதன் மோட்டார் சுமார் 4 கிலோ வாட் சக்தியை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பைக்கின் செயல்திறன் ஆனது, 110cc பெட்ரோலில் இயங்கக் கூடிய ஸ்கூட்டருக்கு இணையான திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது 90 கிமீ தூரத்திற்கு செல்லும் எனவும், அன்றாட பயணங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் விலையானது ரூ.1.20 லட்சம் இருக்கும் எனவும், வரும் ஜூன் 13 ஆம் நாள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image

Revamp Moto RM Mitra

இந்த வகை மாடல் பைக்கானது, மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லக் கூடியதாகும். இந்த பைக்கும் எலக்ட்ரிக் டைப் பைக் ஆகும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிமீ தொலைவில் செல்லலாம் என கூறப்படுகிறது. இது போன்ற பல்வேறு அட்டகாசமான அம்சங்களைக் கொண்ட இந்த பைக்கானது வரும் ஜூன் மாதம் 22 ஆம் நாள் வெளியாகும் எனவும், இதன் விலையானது 1.06 லட்சம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image

Yamaha XSR155 பைக்

பைக் பிரியர்கள் விரும்பும் அசத்தல் பிராண்டான Yamaha XSR155 ஆனது 155 cc இன்ஜின் மூலம் இயக்கப்படும் பைக் ஆகும். இந்த பைக், XSR155 இன்ஜின் 19.3 PS-ல் 10000 rpm-ஐக் கொண்டுள்ளது. மேலும், 14.7 Nm-க்கு 8500 rpm-ன் Torque-ஐ உருவாக்கியுள்ளது. இதன் பின்புறம் மற்றும் முன்புறத்தில் Disc Brakes இடம்பெற்றுள்ளது. இந்த டூவீலரின் விலையானது ஜூன் மாதம் 22 ஆம் நாள் வெளியிடப்படும் எனவும், இதன் விலை ரூ.1.40 லட்சம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image

SVITCH CSR 762

SVITCH CSR 762 டூவிலர், வித்தியாசமான வடிவைப்பைக் கொண்டிருக்கும். குஜராத்தைச் சேர்ந்த EVmaker நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் CSR 72 Electric பைக்கை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த SVITCH CSR 762 பைக் ஆனது 3.7 கிலோ வாட் பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வேகத்திற்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது. பைக் பிரியர்களால் விரும்பப்படும் இந்த பைக் வரும் ஜூன் 2023 ஆம் நாள் வெளியிடப்படும் எனவும், இதன் விலை 1.65 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவிருக்கும் அட்டகாசமான பைக் மாடல்கள்..! | Best Bike Under 2 Lakh In India 2023Representative Image

Peugeot Django 125

Peugeot Motocycles Django 125 பைக் ஆனது 125cc என்ஜினைக் கொண்டுள்ளது. இது 11.5 PS-க்கு 8000rpm-ஐக் கொண்டிக்கும். இந்த பெட்ரோல் வகை பைக் ஆனது BS6 Emission Type-ஐக் கொண்டுள்ளது. இந்த மாடல் பைக், வரும் ஜூலை 2023 வெளியிடப்படும் எனவும், இதன் விலையானது ரூ.1.40 லட்சம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்