Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார் சாவியை எடுக்காமல் அவசரத்தில் டோரை லாக் செய்தா.... என்ன செய்வது...? | How To Open Car Without Key in Tamil

Manoj Krishnamoorthi Updated:
கார் சாவியை எடுக்காமல் அவசரத்தில் டோரை லாக் செய்தா.... என்ன செய்வது...? | How To Open Car Without Key in Tamil  Representative Image.

நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதை யோசிக்க கூட நேரமில்லாமல் பறக்கும் அவசர உலகில் இருக்கிறோம். நம் அவசரத்திற்கு நாம் செல்லும் இடத்திற்கு கொண்டு செல்லும் கார் மற்றும் பைக் பற்றிய பதிவு ஆகும். இதன் சாவி இல்லை என்றால் வண்டியை இயக்குவது என்பது கடினமாகும். ஒருவேளை இருசக்கர வாகனம் என்றால் கூட தள்ளி சென்று பழுது பார்த்து கொள்ளலாம். ஆனால், காரின் சாவி கையில் என்றாலே பெரும்பாடாகும். காரின் சாவியை தொலைத்தால் கதையே வேறு, ஓருவேளை காரின் சாவியை காரின் உள்ளே வைத்து பூட்டி விட்டால் கார் லாக் ஆகிவிடும். அப்போ எழும் குழப்பத்திற்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.  

பெரும்பாலும் கார் பயன்படுத்தும் எல்லோருக்கும் இந்த சிக்கல் ஒரு தலைவலியாக இருக்கும். இந்த பிரச்சனை பழைய கார்களைக் காட்டிலும் புதிய தொழில்நுட்ப படைப்பில் உருவாகி இருக்கும் லேட்டஸ் காரில் தான் அதிகம். ஆம், காரின் டோர் சரியாக மூடவில்லை என்றால் சிறிது நேரத்தில் தானாகவே முடிவிடும். இது குழந்தைகள் விளையாடும் சமயத்தில் அதிகம் நடக்கிறது. 

நம் வீட்டில் நடந்தால் ஸ்பேர் கீயை வைத்து திறந்துவிடும். ஆனால் நம்மால் ஸ்பேர் சாவியை எடுக்கும் தூரம் அல்லாமல் தொலைவில் நடந்துவிட்டால் பெரும் பிரச்சனை ஆகிவிடும். அப்போது பெரும்பாலோனோர் எடுக்கும் ஒரு முடிவு காரின்  லாக்கை உடைப்பது ஆகும். இந்த மாதிரியான சமயத்தில் காரின் லாக்கை திறக்க 3 டிப்ஸ் உள்ளது.

கார் சாவியை எடுக்காமல் அவசரத்தில் டோரை லாக் செய்தா.... என்ன செய்வது...? | How To Open Car Without Key in Tamil  Representative Image

சாவி இல்லாமல் காரை திறப்பது எப்படி? (How To Open Car Without Key)

1. ஷூ லேஸ்

கார் லாக்கை திறக்க எல்லா இடத்திலும் கிடைக்கும் பொருள் ஷூ லேஸ் ஆகும். நம் ஷூ லேஸை எடுத்து ஒரு நுணியில் மட்டும் சிறிய முடிச்சு போட்டு கொள்ளவும். இப்போது கார் கதவு இடுக்கின் உள்ளே மெதுவாக விடவும். பொறுமையாக உள்ளே விட்ட லேஸை வெளியே எடுத்தால் கார் லாக் திறக்கும்.

2. ஹேங்கர்

ஷூ லேஸ் பயன்படுத்துவது கை கொடுக்கவில்லை என்றால் ஹேங்கர் உள்ளது. நம் ஆடைகளை மாட்ட யூஸ் பண்ணும் ஹேங்கர் இந்த விஷயத்தில் கை கொடுக்கும்.  ஸ்டீல் ஹேங்கரின் ஒரு முனையில் கொக்கி இருக்கும். இந்த கொக்கி பெரும்பாலும் கார் டோர் இடுக்கு உள்ளே செல்லும். இந்த கொக்கியை கதவு இடுக்கில் செலுத்த கண்ணாடியுடன் இருக்கும் ரப்பர் கார்க்கை கிழித்து பொறுமையாக கொக்கி சொருகி காரின் டோடரை நீக்கலாம்.   

3.பிளாஸ்டிக் ஸ்டிரிப்

கார் லாக் ஆகும் நேரத்தில் ஹேங்கர் ப்ரும்பாலும்  கிடைக்காது, அப்போது பிளாஸ்டிக் ஸ்டிரிப் நல்ல மாற்றாக அமையும்.  இது அருகில் இருக்கும் கடை அல்லது மெக்கானிக் கடை  போன்ற இடத்தில் பெரும்பாலும் இருக்கும்.  இந்த ப்ளாஸ்டிக் ஸ்டிரிப்பை அதன் நாப்பில் விட்டு முடித்து கொள்ளவும். இப்போது மெதுவாக காரின் டோர் இடுக்கில் நுழைத்து லாக்கில் மாட்ட முயலவும். இந்த செயல் அதிக நேரம் எடுத்தாலும் எந்தவித டேமேஜ் இல்லாமல் எளியதாக காரின் லாக்கை நீக்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்