Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த நிறத்தில் கார் வாங்கின நல்லது... கலர்ல இவ்வளவு விஷயம் இருக்கா.... | Tips To Choose Perfect Car Color

Manoj Krishnamoorthi Updated:
எந்த நிறத்தில் கார் வாங்கின நல்லது... கலர்ல இவ்வளவு விஷயம் இருக்கா.... | Tips To Choose Perfect Car ColorRepresentative Image.

நம் பல பேருக்கு கார் வாங்குவது ஸ்டேட்டஸ் விஷயம் என்பதை விட பல நாள் ஆசையாக தான் இருக்கும். பெரும்பாலும் நாம் நினைப்பது உண்டு கார் வாங்கும்போது நமக்கு விருப்பமான கலர்களை தேர்வு செய்கிறோம் என்றுதான், அது உண்மைதான் என்றாலும் இன்னும் சுவாரஸ்யமான தகவல் இந்த பதிவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

எந்த நிறத்தில் கார் வாங்கின நல்லது... கலர்ல இவ்வளவு விஷயம் இருக்கா.... | Tips To Choose Perfect Car ColorRepresentative Image

காரின் நிறத்தை எப்படி தேர்வு செய்வது..? (Tips To Choose Perfect Car Color)

காரை வாங்கும்போது நாம் மையிலேஜ், பர்ஃபாமன்ஸ் போன்ற விஷயத்தை கலரையையும் கவனத்தில் வைக்க வேண்டும். காரின் கலர் விருப்பத்திற்கு ஏற்ப செல்க்ட் செய்வதற்கு முன் இந்த விஷயத்திற்கு ஏற்றதா... என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எந்த நிறத்தில் கார் வாங்கின நல்லது... கலர்ல இவ்வளவு விஷயம் இருக்கா.... | Tips To Choose Perfect Car ColorRepresentative Image

பராமரிப்பு

நம் விருப்பத்திற்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள் என பல நிறங்களில் கார் வாங்கலாம். ஆனால் மெயிண்டனன்ஸ் என்பது தான் இங்க கேள்வியாக உள்ளது. ஆம்... அடர்த்தியான கலர் என்றால் அதிகமான பராமரிப்பு தேவைப்படும். அதுவே வெள்ளை, சில்வர் போன்ற நிறம் என்றால் பராமரிப்பு நேரம் மட்டுமில்லாமல் கீரல் விழுந்தால் பளிச்சென தெரியாது. 

மேலும் லைட் கலர் காரின் பாடிகலர் மங்குவதற்கான வாய்ப்பு குறையும். அடர்த்தியான நிறத்தை விட லைட்டான கலர் காருக்கு தூசியால் அதிகம் பாதிப்பு இருக்காது.

மதிப்பு

மதிப்பு என்பது ஒரு பொருள் வாங்கும்போது மட்டுமில்லாமல் விற்கும்போது இருப்பது சிறந்ததாகும். சற்று சிந்தித்து பார்ப்போம், நாம் வாங்கும் கார் பிரபலமாக ரோட்டில் பார்க்கும் கார் போல அல்லாமல் கோல்டன்,மஞ்சள் என்று இருந்தால் அதை விற்கும்போது அதன் மதிப்பு வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 4- 5 வருடங்களில் பொதுவான கலரில் இருக்கும் காரின் விலைக்கு பாதியாக கூட குறையலாம். 

வெப்பம்

அடர்த்தியான நிறம் அதிக வெப்பத்தை ஈர்க்கும் என்பது அறிவியல் ஆகும். அதுவும் காரில் இருப்பது மெட்டல் பாடி அதில் டார்க் கலர் பெயிட் இருந்தால் அதிக வெப்பம் காரின் உள்ளே புகுந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் வெள்ளை, சில்வர், க்ரே போன்ற லைட்டான கலர் தான் சிறந்தது ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்