Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

ரீ எண்டரி கொடுத்த Moto Morini.. இனி இந்தியா சாலையில் Seiemmezzo 6 1/2 ராஜ்ஜியம் தான்...!

Manoj Krishnamoorthi Updated:
ரீ எண்டரி கொடுத்த Moto Morini.. இனி இந்தியா சாலையில் Seiemmezzo 6 1/2 ராஜ்ஜியம் தான்...!Representative Image.

பிரபலமான Moto Morini பிராண்ட் அதன் ஸ்டைலான லுக் மற்றும் அசத்தலான பர்ஃபாமன்ஸ்க்கு பேர் போனது. பொதுவாக ஸ்டைலான நல்ல பர்ஃபாமன்ஸ் பைக் தேடும் நபர்களில் வரும் பைக்களில் Moto Morini இல்லாமல் போகாது. சமீப காலமாக எதிர்பார்த்த Moto Morini யின் லான்ச் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நடந்தது. 

Moto Morini Seiemmezzo 6 1/2 பைக் ஜனவரி 13 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இனி இந்தியாவில் விற்பனையாக உள்ள Moto Morini Seiemmezzo 6 1/2 பைக் பலரின் தேடலில் இருக்கும் பைக் ஆகும். இந்த பைக்கின் விலை, இன்ஜின் பர்ஃபாமன்ஸ் எவ்வளவு போன்றவற்றை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ரீ எண்டரி கொடுத்த Moto Morini.. இனி இந்தியா சாலையில் Seiemmezzo 6 1/2 ராஜ்ஜியம் தான்...!Representative Image

Moto Morini Seiemmezzo 6 1/2

ரெட்ரோ ஸ்டைலில் சீறி பாயும் பைக் வேண்டுமென்றால் Moto Morini Seiemmezzo 6 1/2 தான் சரியானது. சுமார் ஒரு மணி நேரத்தில் 60 km செல்லும் திறன் கொண்ட இந்த பைக் 649 cc இன்ஜின் கொண்டு BS6 விதிமுறையில் உருவாக்கப்பட்டது. 

சீறி பாயும் வேகத்தில் சென்றாலும் உடனே நிற்கும் ABS டிஸ்க் பிரேக் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ளது.  6 வேரியண்டை கொண்ட 6 1/2 பைக் 6 நிறங்களில் கிடைக்கும். சிறந்த லாங் டைரைவ் பைக்காக உருவான 6 1/2  பைக் 649 cc liquid cooled 2 சிலிண்டர் இன்ஜினில் செயல்படும். 18 இன்ச் முன்புற டயர் மற்றும் 17 இன்ச் பின்புற டைர் இரண்டிற்கும் 298 mm மற்றும் 255 mm டிஸ்க் பிரேக் பொருத்தி இருக்கிறது.

ரெட்டோ ஸ்டைல் லுக்கில் உருவாகி இருப்பதற்கு ஏற்ற wire spoke wheel தான் கொடுக்கபட்டுள்ளது. ஆனால் மொபைல் ப்ளுடூத், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் டிரிப்மீட்டர், டிஜிட்டல் டேக்கோமீட்டர் போன்றவை லேட்டஸ் பைக்கில் இருக்கும் வசதிகள் எல்லாமும் உள்ளது. 28 km மைலேஜ் அளிக்கும் Moto Morini Seiemmezzo 6 1/2 பைக்கிற்கு 15.5 லிட்டர் பெட்ரோல் டேங் அளிக்கப்பட்டுள்ளது. 

ரீ எண்டரி கொடுத்த Moto Morini.. இனி இந்தியா சாலையில் Seiemmezzo 6 1/2 ராஜ்ஜியம் தான்...!Representative Image

Cafe Racer பைக் தோற்ற அமைப்பில் உள்ள 6 1/2 பைக் 55.7 ps பவரை 54 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் மொத்த எடை 215 kg ஆகும், ஆனால் 795 சீட் ஹைட் ஒட்ட வசதியாக இருக்கும். இரவு நேர பயணத்திற்கு ஏற்ற LED ஹெட்லைட், டெயில் லைட், DRLs போன்றவை சிறப்பானதாக உள்ளது. 

6 ஸ்பீடு மேனுவல் கியர் கொண்ட Moto Morini Seiemmezzo 6 1/2 பைக்கின் விலை 6.89- 7.10 லட்சம் ஆக இருக்கும்.  6 கலரில் கிடைக்கும் Moto Morini Seiemmezzo 6 1/2 ஒவ்வொரு நிறத்திற்கு தனி விலையை கொண்டுள்ளது. இந்த பைக் Kawasaki Z650RS யின் விற்பனைக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்