Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ola S1 Pro ப்ர்ஃபாமன்ஸ் எப்படினு தெரிஞ்சுக்கனுமா.....! | Ola S1 Pro Review In Tamil

Manoj Krishnamoorthi Updated:
Ola S1 Pro ப்ர்ஃபாமன்ஸ் எப்படினு தெரிஞ்சுக்கனுமா.....! | Ola S1 Pro Review In Tamil Representative Image.

எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் Ola நிறுவனம் மிகவும் பிரபலமானது. Ola நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக விற்பனை செய்த மின்சார வாகனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல் Ola S1 மற்றும் Ola S1 Pro மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பதிவு Ola S1 Pro இன் சிறப்புகள் என்னென்ன உள்ளது என்பதை பார்ப்போம். 

Ola S1 Pro

தினசரி நம் பயன்பாட்டில் இருசக்கரத்தின் பயன்பாடு அதிகம், குறிப்பாக ஆபிஸ் செல்லும் அனைவருக்கும் ஸ்கூட்டர் ஒரு அத்தியாவசியம் ஆகும். Ola S1 Pro சிட்டி ரைடு சரியான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும், ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 km வரை மைலேஜ் அளிப்பதே இதன் சிறப்பாகும். அதுவும் சரியாக மெயிண்டைன் செய்தால் 125 km மைலெஜ் கூட கிடைக்குமாம். 

அதிகப்பட்ச வேகம் 120 km/hr செல்லும் Ola S1 Pro ஸ்கூட்டரின்  டிஸ்க் ப்ரேக்கிங் ஸ்டமம் நல்ல ரைடு அளிக்கும். 1, 29, 999 ரூபாய்க்கு விற்பனை ஆகும் Ola S1 Pro Tubeless டையர், அலாய் வீல்  மற்றும் mono shock ஸ்பன்ஸன் நல்ல லுக் அளிக்கிறது. ஆனால் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போல இருக்கும் பாடி ஓரளவு மட்டும் ஈர்க்கிறது. 

ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற 6:30 மணி நேரம் எடுக்குமாம், இதன் லித்தியம் அயன் பேட்டரி நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது. Ola S1 Pro ஸ்கூட்டருக்கு அளிக்கும் 3 வருட வாரண்டி வாகனத்தின் தரத்தை உணர்த்துகிறது.  

அதேவேளையில் Ola S1 ஸ்கூட்டரில் ஏற்பட்ட சென்சார் குறைகள் மற்றும் cruise control இந்த S1 Pro வில் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த வண்டியின் ஒரு மைனஸ் என்றால் மலை பகுதியில் ஓட்ட கம்மியான பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது. வண்டியை ரிசெட் செய்ய சுமார் 15 வினாடிகள் பவர் பட்டன் மற்றும் cruise control யை அழுத்த வேண்டியதை மாற்றினால் இன்னும் நல்ல யூசர் ஃபரிண்ட்லியாக இருக்கும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்