Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!

Manoj Krishnamoorthi Updated:
Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!Representative Image.

பைக் ரைடர்ஸின் ஃபவரேட் பிரண்டு ராயல் என்ஃபீல்டு ஆகும், 60களில் இருந்து இன்று வரை பலரின் ரசனைக்கு சொந்தமான பைக் இதுவாகும். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350  விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த லான்ச் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650  (Royal Enfield Super Meteor 650) 2023 ஆண்டு ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் நம்மை கவரும் சிறப்புகள் என்னவென்று என்பதை கீழே காண்போம். 

Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!Representative Image

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650  (Royal Enfield Super Meteor 650)

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தன் அடுத்த பைக்கை ஜனவரி 2023 ஆம் ஆண்டில் வெளியீட உள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 டூரர் என இரு வேரியண்டுகளில் கிடைக்கிறது.  ஏஸ்ட்ரல் ப்ளக், ஏஸ்ட்ரல் ப்ளு, ஏஸ்ட்ரல் கிரின், இண்டர்செல்லார் க்ரே, இண்டர்செல்லார் கிரின், செலிஸ்டைல் ரெட், செலிஸ்டைல் ப்ளு போன்ற கண் கவரும் வண்ணத்தில் விற்பனைக்கு வருகிறது. 

Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!Representative Image

சிறப்பம்சங்கள் (Royal Enfield Super Meteor 650 Specifications In Tamil)

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் முக்கிய சிறப்பு ஏர் & ஆயில் கூலிங் (Air and Oil Cooling System) ஒரு தொலைதூர பயணத்திற்கு ஏற்ற வண்டியாக மாற்றியுள்ளது. இந்த பைக்கின்  648 cc திறனில்  47 bhp அதிகபட்ச பவர் ஏற்படுத்தும் செயல்திறன் BS- 6 வரையறைக்கு உட்பட்டது. 1 டவுன் 5 அப் என்ற 6 மேனுவல் கியர் சிஸ்டம், டிஜிட்டல் இக்னிக்கேஷன், டிஸ்க் பிரேக் நமக்கு   சிறப்பான ரைடை அளிக்கும்.

மேலும் LED indicator, LED ஹெட்லைட், டிலக்ஸ் ஃபூட்பேக் மஏஏஉம் அலாய் வீல் பைக்கின் ஆசை ஏற்படுத்துகிறது. இந்த பைக்கில் இருக்கும் 100/90 முன் டயர் மற்றும் 150/ 80 பின் டயர் தொலைதூர பயணத்திற்கு ஏற்றதாகும். மீடியமான உயரம் 740 mm இருப்பதால் உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு சரியாக பொருந்தும்.   

ஒரு லிட்டருக்கு 25 கி.மி அளவு மைலஜ் அளிக்கும் சூப்பர் மீட்டியோர் 650 ஜனவரி 2023 இல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இதன் விலை 3.0 - 3.5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 52.3 nm டார்கில் 47 bhp பவரில் 160- 170 kmph வேகத்தில் செல்லும் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 அடுத்த வருடம் எல்லோரும் வாங்க நினைக்கும் வாகனமாக மாறலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்