Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023

Manoj Krishnamoorthi Updated:
2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023Representative Image.

TVS நிறுவனம் மோட்டார் உற்பத்தியில் உலகின் 2வது மிகப்பெரிய நிறுவனம். இதன் இருசக்கரங்கள் இந்தியா முழுக்க சாலையில் இருக்கிறது. சாலையில் தினமும் TVS பிரண்டு வாகனங்களை பார்க்காமல் இருக்க முடியாது. இந்த நிறுவனத்தின் மீது இந்திய மக்களுக்கு ஒருவித நம்பிக்கை எப்போதுமே உண்டு, அதன் வெளிப்பாடு தான் சாலை எங்கும் இருக்கும் TVS இருசக்கர வாகனங்கள். இந்த பதிவு 2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்கின் விலை, சிறப்பு போன்றவையின் சுவாரஸ்யத்தை காட்டும். இது பற்றிய இந்த பதிவை பின்தொடரவும்.  

TVS விலை (TVS Upcoming Bikes 2023)

2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023Representative Image

TVS Apache RTR 310

TVS பைக்களில் மிகவும் பிரபலமான Apache இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பைக் ஆகும். இந்த பைக்கின் அப்டேட் வேர்ஷனான Apache RTR 310 ஸ்டைலான ஸ்ட்ரிட் பைக், இது 34 PS @ 27.3 Nm வெளிப்படுத்தும் 312 cc பைக் ஆகும். மார்ச் மாதம் 2023 முதல் விற்பனை செய்ய உள்ள Apache RTR 310 விலை 1.99- 2.48 லட்சமாக இருக்கலாம். மேலும் டூயல் சேனல், 6 கியர் பாக்ஸ் உள்ளது. இந்த பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 

2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023Representative Image

TVS ADV

ரேஸிங் பைக் போன்ற பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ள பைக் பிரியர்களுக்கானது TVS ADV ஆகும். 106 cc பைக்கான TVS ADV 7.6 PS @ 7.85 Nm விலை 1.50 லட்ச ரூபாய் ஆகும். இதன்  4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு இன்ஜின் மற்றும் ஃப்ரண்டு/ ரியர் டிஸ்க் ஸ்மூத்தான ரைடு அளிக்கும். 13 லிட்டர் ஃபுயல் கெப்பாஸ்டி மற்றும் அனலாக் மீட்டர் வழக்கம் போல தான் உள்ளது. 

2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023Representative Image

TVS Fiero 125

குறைந்த விலையில் லான்ச் செய்ய உள்ள 125 cc பைக்கான TVS Fiero 125 ஜூன் 2023 இல் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டிஸ்க் பிரேக், 125 cc ஏர் கூல்டு இன்ஜின் கொண்ட  TVS Fiero 125 விலை 80,000 ரூபாய் இருக்கலாம். குறைந்த விலையில் சந்தைக்கு வரும் இந்த பைக் Pulsar 125, Hero Glamour 125, Honda SP 125 பைக்களுக்கு போட்டியாக அமையும். 

2023 ஆண்டில் வெளியாக உள்ள TVS பைக்...! | TVS Upcoming Bikes 2023Representative Image

TVS Zeppelin R

1.50 லட்சம் ரூபாய் விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்ய உள்ள TVS Zeppelin R பைக் 2023 இறுதியில் அல்லது ஜனவரி 2024 இல் லான்ச் செய்யப்படும்.  220 cc பைக்கான TVS Zeppelin R ஹைவே டிராவலுக்கு ஏற்றதாக இருக்கும்.

 ABS பிரேக் இருந்தாலும்  self start மட்டுமே இருப்பது சாதாரண பைக் அம்சத்தை காட்டும். க்ளாசிக் மாடலில் உருவாகி இருப்பதற்கு ஏற்ற spoke wheel மற்றும் இன்றைய காலத்தில் பயன்படுத்தும் டூப்லெஸ் டைர் தான் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்