Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஸ்வராஜின் 'Target' range லைட் டிராக்டர்கள் அறிமுகம்...விலை எவ்ளோ தெரியுமா? | Swaraj Launches Target Range Tractors

Priyanka Hochumin Updated:
ஸ்வராஜின் 'Target' range லைட் டிராக்டர்கள் அறிமுகம்...விலை எவ்ளோ தெரியுமா? | Swaraj Launches Target Range TractorsRepresentative Image.

மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நாட்டின் இரண்டாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரான ஸ்வராஜ் டிராக்டர்ஸ் தற்போது வளர்ந்து வரும் தோட்டக்கலை துறையில் பங்கேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, டார்கெட் என்ற பிராண்டின் கீழ் 20-30 ஹார்ஸ் பவர் கொண்ட புதிய வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திராவின் பண்ணை உபகரண வணிகத்தின் தலைவர் ஹேமந்த் சிக்கா கூறுகையில், கடந்த சில வருடங்களாக ஸ்வராஜ் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக உள்ளது. அத்துடன் இந்த புதிய டிராக்டர்களை அறிமுகப்படுத்தும் திட்டம் சிறந்த செயல்திறனைத் தக்கவைத்து, பங்கை வளர்ப்பதற்காக என்று கூறினார். "இந்தியா ஒரு பெரிய தானிய நுகர்வு நாடாக இருந்தாலும், தோட்டக்கலைத் துறை சந்தையை கணிசமாக பின்னுக்கு தள்ளி வருகிறது. வெறும் 18% பயிர் பரப்பளவில், தோட்டக்கலை விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆகும். இதனை கருத்தில் கொண்டு புதிய தயாரிப்புகளுடன் தங்களுக்கான இலக்கை வைத்து வெளியிடுவதாக" சிக்கா கூறினார்.

என்னது தோனியும் இத யூஸ் பண்றாரா?

இந்த புது சிறிய எடை கொண்ட டிராக்டர்கள் 1,500-க்கும் மேற்பட்ட வருங்காலத்தில் வாங்குபவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் குறுகிய பாதை, அகலம் மற்றும் குறைந்த டர்னிங் ரேடியஸ் உள்ளிட்ட இறுக்கமான இடங்களை விவசாயிகள் சிரமமின்றி செல்ல அனுமதிக்கிறது. இந்த புதிய தயாரிப்பால் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் பயிர் சேதத்தை குறைக்கிறது என்று நிறுவனம் கூறியது.

இதுல முக்கியமான விஷயம் என்ன என்றால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் ராஞ்சியில் உள்ள தனது 40 ஏக்கர் பண்ணையில் ஸ்வராஜ் டிராக்டர்களை பயன்படுத்தி வருகிறார். மேலும் எதிர்காலத்தில் தோனியை பிராண்ட் அம்பாசிடராக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

ஸ்வராஜ் நிறுவனம் ஆரம்பத்தில் 20-30 ஹெச்பி (14.91 – 22.37kW) பிரிவில் இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தும். ஸ்வராஜ் டார்கெட் 630 மாடல் முதலில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள டீலர் நெட்வொர்க் மூலம் கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.35 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்