Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டோல்கேட்டில் ஃபாஸ்ட் டேக் தேவையில்லை.... இனி இந்த மாதிரி தான் கட்டணம் வசூலிக்கப்படும்..! | tollgate payment new method in india

Manoj Krishnamoorthi Updated:
டோல்கேட்டில் ஃபாஸ்ட் டேக் தேவையில்லை.... இனி இந்த மாதிரி தான் கட்டணம் வசூலிக்கப்படும்..! | tollgate payment new method in indiaRepresentative Image.

இந்தியாவில் பொருத்தவரை சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் மூலமாக சுங்கச்சாவடி கட்டணம் வாங்கப்படுகிறது. ஆனால் அந்த முறைக்கு மாற்று ஏற்பாடாக ஒரு புதிய  வழிமுறை வர உள்ளது. இந்த மாற்று ஏற்படும் மூலம் நமக்கு எதாவது சிக்கல் வருமா.... இல்லை  சுமையை குறைக்குமா என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முன்பு எல்லாம் வெளியூர் செல்லும்போது சுங்கச்சாவடி கட்டணம் நேரடியாக சுங்கச்சாவடியில் செலுத்தும் முறைதான் இருந்தது. அதன்பிறகு இந்த முறை பாஸ்ட்டேக் மூலம் செலுத்தும் வகையில் மாற்றப்பட்டது. இதனால் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் நிற்கும் நிலை மாறியது. தற்போது 97% சுஙச்சாவடி கட்டணம் பாஸ்ட்டேக் முறையில் தான் நடக்கிறது. ஆனால் சில இடங்களில் முன் இருந்ததைப் போல் வாகனங்கள் வரிசையில் நிற்கிறது. இந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு புதிய முயற்சி செய்ய உள்ளது.

ANPR என்ற முறைதான் புதியதாக மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இது காரின் நெம்பர் பிளேட்களை குறித்து கட்டணத்தை எடுத்து கொள்ளும் முறை ஆகும். இந்த முறை அமலுக்கு வந்தால் காரின் நெம்பர் பிளேட்டை படம் எடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எந்த இடத்தில் செல்கிறது என்ற தகவலை தெரிவிக்கும். 

மேலும், இந்த புதிய முறை எவ்வளவு தூரம் கார் சென்றுள்ளது என்பதை பொருத்து  கட்டணத்தை தானாக வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். இதனால் தற்போது உள்ள சுங்கச்சாவடி அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்