Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் ஒரே ஸ்கூட்டர் Yamaha Fascino தான்....!

Manoj Krishnamoorthi Updated:
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் ஒரே ஸ்கூட்டர் Yamaha Fascino தான்....!Representative Image.

Yamaha நிறுவனம் பைக் தயாரிப்பில் மிகவும் பிரபலமானதாகும். இந்த நிறுவனம் தயாரில் உருவான ஸ்கூட்டர் தனித்துவமான பர்ஃபாமன்ஸ் மற்றும் ஈர்க்கும் டிசைன் கொண்டது.  இந்த பதிவின் மூலம் Yamaha Fascino ஸ்கூட்டரின் செயல்திறன், விலை, சிறப்பு அம்சங்களை காண்போம். 

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் ஒரே ஸ்கூட்டர் Yamaha Fascino தான்....!Representative Image

Yamaha Fascino 125

இந்தியாவில் உள்ள ஸ்கூட்டரில் அதிகமான மைலேஜ் அளிக்கும்  Yamaha Fascino ஸ்கூட்டரின்  125cc மாடல் ரூ. 70,000- 90,000 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. 99 kg எடை கொண்ட Fascino 125 கையாள எளிமையாக உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 90 km/h வேகம் செல்லும் திறன் கொண்ட இந்த Fascino 125 ஸ்கூட்டர் 8.2 PS பவர் மற்றும் 10.3 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.

2 சிலிண்டர் ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் இன்ஜின் கொண்ட Fascino 125 BS6 விதிமுறையில் தயாரிக்கப்பட்டது. ஒரு லிட்டருக்கு 65.92 km மைலேஜ் அளிக்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் அதிகமான டார்க் அளிக்கும் திறன் நமக்கு டிரைவிங்கில் நல்ல பிக் அப் கொடுக்கிறது.

கவர்ச்சியான நிறங்களில் கிடைக்கும் Fascino 125 ஸ்கூட்டர் டிஸ்க் மற்றும் டரம் வேரியண்டாக இரண்டு வகையில் உள்ளது. எல்லா தரப்பு வாடிக்கையாளரின் தேவையையும் பூர்த்தி செய்துள்ள Fascino 125 ஸ்கூட்டரின் ஹெட்லைட் டிசைன்  கிளாசிக்காக உள்ளது.  

மேலும் இதன் அசத்தலான சிட்டி டிரைவ் பர்ஃபாமன்ஸ்  Fascino 125 ஸ்கூட்டரை மற்ற ஸ்கூட்டர்களிடம் இருந்து தனித்துவமாக்குகிறது. 5.2 லிட்டர் புயல் டேங்க்  மற்றும் மெட்டல் பாடி பாதுகாப்பான டிரைவிங் அளிக்கும். இதன் கிக் மற்றும் செல்ப் ஸ்டாட்டர் செட் அப் எளிமையாக வண்டியை ஸ்டார்ட் செய்ய வைக்கும்.

குறிப்பாக இதன் அதிகமான மைலேஜ் மற்றும் வசதியான 145 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் UBS போன்ற பாதுகாப்பான பிரேக்கிங் சிஸ்டத்திற்காகவே இந்த வண்டியைத் தேர்ந்தெடுக்கலாம். 125 cc ஸ்கூட்டரான Fascino 125 சிட்டி ரைடிங்கில் சிறப்பாக இருப்பது Aciva, Jupiter, Vespa போன்றவைக்கு நல்ல போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்