Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

உங்க சரும ஆரோக்கியத்தை கெடுக்கும் இந்த 7 இயற்கை பொருட்கள்...!!

Nandhinipriya Ganeshan August 09, 2022 & 12:00 [IST]
உங்க சரும ஆரோக்கியத்தை கெடுக்கும் இந்த 7 இயற்கை பொருட்கள்...!!Representative Image.

இயற்கை பொருட்கள் பாதுகாப்பானதாக இருந்தாலும், அளவுக்கி மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. அந்த வகையில், என்ன தான் இயற்கை பொருட்களாக இருப்பினும் நாம் அவற்றை அளவுக்கு அதிகமாக சருமத்தில் பயன்படுத்தும் போது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதை கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மையும்கூட. அப்படி, சருமத்தை பாதிக்கும் இயற்கை பொருட்களை என்னென்ன என்பதை பார்க்கலாம். 

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது. இதை நேரடியாக பயன்படுத்தும்போது ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு சருமத்தில் அரிப்பு, சிவந்து காணப்படுதல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, எப்போதும் எலுமிச்சை சாற்றை மற்றொரு பொருளுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

தேங்காய் எண்ணெய்:

என்னாது தேங்காய் எண்ணெயுமா? என்று ஷாக்காக வேண்டாம். சரும பராமரிப்பு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள் ஆயிரம். இருப்பினும், இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள் அதிகரிக்கும். 

ஸ்க்ரப்ஸ்:

சருமத்தில் உள்ள அழுக்கு, இறந்த செல்களை அகற்றுவதற்காக நம்மில் பலரும் அவ்வப்போது சர்க்கரை அல்லது உப்பைக் கொண்டு ஸ்க்ரப் செய்வதுண்டு. ஆனால், சென்சிட்டிவ் சருமம் உடையவர்கள் இந்த பொருட்களை கொண்டு ஸ்க்ரப் செய்யக்கூடாது. ஏனென்றால், அவை உங்க சருமத்தின் முதல் நிலை தோல்களை உரித்து மேலும் பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

வினிகர்:

வினிகர் அழகு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று. ஏனென்றால், இதன் அமிலத் தன்மை சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. ஆனால், அதிக உணர்திறன் சருமத்தவர் இதை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும்போது, சருமத்தில் தடிப்புகள், சிவந்து காணப்படுதல் போன்ற சருமப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தக்காளி சாறு:

தக்காளி அதிக அமிலத்தன்மை கொண்டது. இதை அதிகமாக இறந்த செல்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்துவதுண்டு. இருப்பினும், சரும வறட்சி உள்ள போது தக்காளி சாற்றினை பயன்படுத்த கூடாது. ஏனெனில், இது சருமத்தில் எரிச்சலை மேலும் அதிகரிக்க கூடியது. எனவே, சரும வறண்டுப் போய் இருக்கும்போது தக்காளி சாற்றினை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா:

சரும பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக சருமத்தில் பயன்படுத்தும்போது சரும ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, அளவுவோடு உபயோகிப்பது சிறந்தது. 

வெண்ணெய்:

வெண்ணெய் கொழுப்பு நிறைந்த ஒரு உணவுப்பொருள் என்று நமக்கு தெரியும். இதை நாம் சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள துளைகள் அடைபடும். அந்த சமயத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் உருவாக வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, வெண்ணெயை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

Tags:

Natural ingredients to never use on your skin | Harmful ingredients to avoid in skincare | Harmful natural ingredients to avoid if you have sensitive skin | Skincare ingredients to avoid if you have sensitive skin


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்