Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Summer Beauty Tips Tamil: சம்மர்ல முகத்துல ஆயில் அதிகமா வடியுதா...? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்ஸ்....!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 17:20 [IST]
Summer Beauty Tips Tamil: சம்மர்ல முகத்துல ஆயில் அதிகமா வடியுதா...? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்ஸ்....!!Representative Image.

Summer Beauty Tips Tamil: இந்த சம்மர் சீசன் வந்துவிட்டாலே எங்கிருந்த தான் முகத்தில் எண்ணெய் வருகிறதோ தெரியாது. அதுவும் ஏற்கனவே, ஆயில் சருமத்தை கொண்டவர்களுக்கு சுத்தம். சும்மாவே எண்ணெய் பிசுக்காக இருக்கும், இந்த சம்மர்ல இன்னும் அதிகமாகி விடும். அந்த சமயத்துல நாம்ப என்னென்னமோ கிரீம் எல்லாம் பயன்படுத்துவோம். ஆனால், அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். 

அதற்கு பதிலாக வீட்டு வைத்தியத்தை ஏன் முயற்சி செய்ய கூடாது...!! இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. கடைகளில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலருக்கு பழமையான வீட்டு வைத்தியத்தின் மீது தான் விருப்பம். 

இந்த வெயிலுக்கு முடி ரொம்ப வெடிக்குதா..? இத பண்ணுங்க. முடி வெடிச்சதும் நல்லானது மட்டுமல்லாம அதிகமாக வளரும்….!.

பொதுவாக, சருமத்தை மென்மையாக்குவதற்கும், பளபளப்பாக்குவதற்கும் இயற்கை வைத்தியங்களான முல்தானி மட்டி, கடலை மாவு, வேப்ப இலைகள், உலர்ந்த பூ இதழ்கள், மற்றும் பலவற்றை முயற்சி செய்வோம். அதேப்போல், குறுகிய நேரத்திலும் சில எளிய முறைகளிலும் தயாரிக்கக்கூடிய சிம்பிளான, ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளும் இருக்கின்றன. வெயிலில் வடியும் எண்ணெயை (oily skin care in summer) தடுக்க சூப்பரான வீட்டு வைத்தியம் வாங்க எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம். 

கொண்டைக்கடலை, தயிர்:

  • 1/4 தேக்கரண்டி கடலை மாவு
  • 1 ஸ்பூன் தயிர்
  • சிறிதளவு மஞ்சள் பொடி
  • மூன்றையும் கலந்து முகத்தில் தடவவும்
  • 10 நிமிடம் கழித்து வெதுவெதுபான நீரில் கழுவிடுங்க
  • இத வாரத்திற்கு இருமுறை செய்து வர, முகத்தில் எண்ணெய் காணாமல் போய்டும்

பால், கோதுமை மாவு:

  • 1 ஸ்பூன் வீட்டில் அறைத்த கோதுமை மாவு
  • பாதாம் பால் அல்லது பால் 1 ஸ்பூன்
  • ரெண்டையும் நன்றாக் பேஸ்டாக கலக்கிக் கொள்ளவும்
  • அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவிடுங்க

நம்ம ஊரு ரோட்டு கடை சாப்பாட்ட அடிச்சிக்க முடியுமா…!! இதுல உங்களுக்கு புடிச்ச டிஷ் சொல்லுங்க..!!

தேன், கொண்டைக்கடலை:

  • 1 ஸ்பூன் தேன்
  • 1/2 ஸ்பூன் கடலை மாவு
  • சிறிதளவு மஞ்சள் பொடி
  • மூன்றையும் நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள்
  • அதை 10 நிமிடங்கள் விட்டு வெவெதுப்பான நீரில் கழுவிடுங்க
  • அப்பறம், பாருங்க வித்தியாசத்தை

பால், ஓட்ஸ்:

  • பால் (நிலைத்தன்மைக்கு ஏற்ப)
  • ஓட்ஸ் மாவு தேவையான அளவு
  • இதை நன்றாக கலந்து, முகத்தில் தடவவும்
  • பாதி காய்ந்ததும் நீரில் கழுவிடுங்க
  • வாரத்தில் இருமுறை மறக்காம இதை செய்ய வேண்டும்

மேற்கூறிய ஈஸியான குறிப்புகளை முயற்சி செய்து, வெயில் காலங்களில் மட்டுமல்லாமல் எப்போதும் மென்மையான, பளபளப்பான சருமத்தை (summer beauty tips in tamil) பெறுங்கள்...!!

உங்க தலைமுடியை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்ற சில குறிப்புகள்... இத ஃபாலோ பண்ணுங்க...!. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்