Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Summer Season Tips in Tamil: கோடை வெயிலை சமாளிக்க புத்துணர்ச்சி தரும் சூப்பரான டிப்ஸ்...!!

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 18:46 [IST]
Summer Season Tips in Tamil: கோடை வெயிலை சமாளிக்க புத்துணர்ச்சி தரும் சூப்பரான டிப்ஸ்...!!Representative Image.

Summer Season Tips in Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே முகத்தில் பருக்கள், எண்ணெய் வடிதல், உடலில் நீரிழப்பு, வியர்வை, கண் எரிச்சல், உடல் சூடு, என ஏராளமான பிரச்சனைகளை சந்திருக்கிறோம். அதுவும் இந்த வருடம் கடந்த வருடத்தை விட வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சரி, இந்த வெயில் காலங்களில் நமது உடலை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம். இந்த டிப்ஸை நீங்க கடைபிடித்து வந்தாலே போதுமானது. கோடை வெயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில (summer heat tips in tamil) டிப்ஸ்....!!

உடற்சூடு:

சம்மர் காலங்களில் உடற்சூடு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதை சமாளிக்க வெந்தயத்தை காலையில் ஊற வைத்துக் கொள்ளவும். அதை இரவு தூங்குவதற்கு முன்பு அரைத்து தலைக்கு பூசிக் காயவைத்துவிட்டு, அடுத்த நாள் காலை குளித்தால் உடற்சூடு விரைவாக (how to protect yourself from summer heat) தணியும். 

பழம் சாப்பிடுங்க:

பழங்களை அறைத்து அதை ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பதிலாக, அதை அப்படிஏ சாப்பிட்டால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். எனவே, முடிந்த வரை தர்பூசணி, வெள்ளரி, இளநீர் போன்ற நீர்ச்சத்து அதிகம் காணப்படும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். 

குடையை மறக்காதீங்க:

கோடைக்காலத்தில் தேவையில்லாம் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். ஒருவேளை, முக்கியமான மற்றும் அவசரமான வேலை இருந்தால் குடையை உடன் எடுத்துச் செல்லுங்கள். பையில் பருத்தியில் ஆன துண்டு ஒன்றை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். 

தண்ணீர் குடிங்க:

 

சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அப்போது தான் உடலில் சூடு தணியும், நீரிழப்பும் ஏற்படாது. ஒரு சிலர் உடல் சூட்டால் பெரிதும் அவதி படுவார்கள், இதற்கு காரணம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதே. அதேபோல் வெளியில் செல்லும்போது ஒரு வாட்டர் தண்ணீர் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்க்கவும். 

குளியல்:

கோடைக் காலங்களில் காலை மற்றும் மாலை என இரு வேளையும் குளியுங்கள். மாலை குளிப்பதைவிட இரவு தூங்குவதற்கு முன்பு குளித்துவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். இரவு உணவு எடுத்து 2 மணி நேரத்திற்கு குளிப்பது நல்லது. இது வியர்வை கட்டுப்படுத்துவதோடு, உடலில் கிருமிகள் தங்குவதையும் தடுக்கிறது.

பருத்தி உடைகளை அணியுங்கள்:

வெயில் காலங்களில் பாலீஸ்டர் ஆடைகளை அணிவதை தவிர்த்து பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பருத்து ஆடைகளுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை உண்டு. அதுமட்டுமல்லாமல், சூரிய உடலில் எளிதில் படாது. எனவே, வெளியில் செல்லும்போது பருத்து ஆடைகளை அணிந்துக் கொள்ளுங்கள். 

சன் கிரீம்:

வெளியில் செல்லும் போது சன் கிரீம் லோஷன்களை கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். இதனால், சருமம் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிடமிருந்து பாதுகாப்பாக (summer beauty tips in tamil)  இருக்கும். ஐஸ் வாட்டருக்கு பதிலாக சீரகத்தை நீங்க குடிக்கும் வாட்டர் பாட்டிலில் போட்டுக் கொள்ளலாம். இது உடற்சூட்டை தணிக்கும். 

முடி பராமரிப்பு:

வெயிலில் செல்லும் போது முடியை ஒரு துணியால் கட்டிக் கொள்ளுங்கள். இல்லையெனில், அதிகப்படியான சூரிய ஒளி முடியில் பட்டு, எளிதில் முடி உதிர்வை ஏற்படுத்தும். அதேபோல், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சம்மர் கட்டிங் செய்து விடுங்கள்.

உணவு முறை:

கோடைக்காலத்தில் அதிக காரமான, அதிக சூடான, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இம்மாதிரியான உணவுப் பொருட்கள் உங்களுக்கு வயிறு எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்