Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

கொத்து கொத்தாக கொட்டும் முடி உதிர்வை தடுக்கவும், முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவும் உதவும் பீட்ரூட் ஜூஸ்..!!

Nandhinipriya Ganeshan September 08, 2022 & 18:20 [IST]
கொத்து கொத்தாக கொட்டும் முடி உதிர்வை தடுக்கவும், முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவும் உதவும் பீட்ரூட் ஜூஸ்..!!Representative Image.

Hair Fall Tips in Tamil: இந்த காலத்தில் நம்மில் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபட்டு வருகிறோம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை தான். என்ன தான் ஷாம்புகளை வாங்கி முடி உதிராமல் தடுத்தாலும், அதுவும் ஒரு இராசாயன பொருள் தானே. அப்படி கூடுதல் கவனம் செலுத்தியும் பலருக்கு முடி இன்னமும் உதிர்ந்து கொண்டு தான் இருக்கு. அப்படி, இந்த முடி கொட்டுற பிரச்சனையில இருந்து எப்படி தான் தப்பிக்கிறது என்று பலரும் யோசித்து கொண்டுதான் இருப்பீர்கள்.

கவலையை விட்டு தள்ளுங்க... முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த ஷாம்புகளுடன் சில பயனுள்ள இயற்கை வீட்டு வைத்தியங்களையும் (hair fall remedy in tamil) சேர்த்து பயன்படுத்தி பாருங்க. முடி உதிர்வு தானாக நின்றுவிடும். ஏனெனில், இயற்கை பொருட்களில் எந்த இராசயனும் கிடையாது. இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை மட்டுமே கொடுக்கிறது. அதோடு பல முடி சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது. வாங்க.. இந்த தீரா பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது என்று பார்க்கலாம்.

ஆயில் மசாஜ்

அந்த காலத்தில் இருந்தே முடி உதிர்தலுக்கு சிறந்த சிகிச்சை ஆயில் மசாஜ். மேலும், மேலும், இது முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. அதேபோல், முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

 • தேங்காய் அல்லது ஆமணக்கு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும்.
 • காட்டன் பஞ்சை கொண்டு உங்கள் உச்சந்தலையில் எண்ணெயை தொட்டு தாராளமாக தடவுங்கள்.
 • ஒரு மணி நேரம் கழித்து உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்து, கொஞ்சமான ஷாம்பூவைக் கொண்டு அலசவும்.
 • சிறந்த ரிசட்டு வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யவும்.

முட்டை மாஸ்க் (Egg Mask)

முட்டையில் புரதம், சல்பர், செலினியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் அயோடின் ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு முடி உதிர்தலையும் குறைக்கிறது.

 • ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கலக்கவும்.
 • பேஸ்ட் செய்ய நன்றாக அடித்துக்கொள்ளவும்.
 • இந்த பேஸ்ட்டை வேர் முதல் நுனி வரை முழுவதும் தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 • மிதமான ஷாம்பூவைக் கொண்டு முடியை அலசவும்.
 • வாரத்திற்கு இருமுறை செய்து பாருங்கள்.. முடி கொட்டுவது உடனே நின்றுவிடும். 

தேங்காய் பால்

தேங்காய் புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளின் நல்ல மூலமாகும், இது வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடி வளர்ச்சியையும் (how to control hair fall in tamil) ஊக்குவிக்கிறது.

 • ஒரு தேங்காயை எடுத்து துருவிக் கொள்ளவும்.
 • தேங்காய் துருவலை ஒரு பாத்திரத்தில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
 • வடிகட்டி மற்றும் ஆறவிட்டு, அதனுடன் 1 டீஸ்பூன் வெந்தய விதைகள் மற்றும் நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு சேர்க்கவும்.
 • அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு பயன்படுத்துங்கள்.
 • 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு ஷாம்பூ கொண்டு கழுவவும்.
 • தேவைப்படும்போது இதை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். 

இப்படியும் தேங்காய் பாலை முடிக்கு பயன்படுத்தலாம்..

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்களில் ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் பி6, பொட்டாசியம், பீடைன் ஆகியவை நிரம்பியுள்ளன. இது உச்சந்தலையின் துளைகளை இறுக்கி முடி உதிர்வை குறைக்கிறது. பீட்ரூட் ஒரு இயற்கையான முடிக்கு வண்ணம் தரும் முகவராகவும்  செயல்படுகிறது

 • இரண்டு பீட்ரூட்டை அரைத்து, சாற்றை பிழிந்துக்கொள்ளுங்கள். 
 • பின்னர், அந்த சாற்றை உங்கள் உச்சந்தலையில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு கொண்டு அலசவும். 
 • வாரத்திற்கு இரண்டு முறை செய்து பாருங்கள்.. மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்.

நாலே பொருள் சுவையான பீட்ரூட் அல்வா ரெடி | How to make beetroot halwa in tamil

அலோ ஜெல்

கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் சி ஆகியவை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரிசெய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தலையில் அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், கற்றாழை ஒரு சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

 • கற்றாழையில் இருந்து ஜெல்லை பிரித்தெடுக்கவும்.
 • ஜெல்லை உங்கள் உச்சந்தலையில் தடவி 45-50 நிமிடங்கள் விடவும்.
 • சாதாரண நீரில் கழுவவும்.
 • இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

வெந்தயம்

வெந்தயம் முடி உதிர்தலுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். இது அனைவரும் அறிந்ததே. இதை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு, அரிப்பு, முடி உதிர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து விடலாம்.

 • 2-3 டீஸ்பூன் வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 • அடுத்த நாள், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி அரைத்து கொள்ளவும்.
 • பேஸ்டுடன் 2-3 தேக்கரண்டி தயிர் சேர்த்து கொள்ளவும். 
 • இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி 45 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
 • சாதாரண நீரில் கழுவவும்.
 • வாரத்திற்கு 1-2 முறை இந்த செயல்முறையை முயற்சித்து பாருங்கள். 

வெங்காயச் சாறு

வெங்காயச் சாறு ஒரு பாதுகாப்பான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியமாகும், இது உங்கள் தலைமுடிக்கு நல்லது. வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. வெங்காயத்தில் உள்ள கந்தகச் சத்து மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.

 • பெரிய வெங்காயம் இரண்டை அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும்.
 • காட்டன் பஞ்சை அதில் நனைத்து உச்சந்தையிலும் முடியிலும் தடவவும். 
 • அதை 30 நிமிடங்கள் விடவும்; வெங்காயத்தின் வாசனையைத் தவிர்க்க லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவவும்.
 • வித்தியாசத்தைப் பார்க்க வாரத்திற்கு ஒரு முறை செய்யவும்

ஆம்லா

இந்திய கூஸ்பெர்ரி என்று அழைக்கப்படும் நெல்லிக்காய், வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும். இதனால், இது மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், பொடுகு வராமல் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், நெல்லிக்காயை உட்கொள்வது முடி உதிர்வைக் (hair fall treatment in tamil) குறைக்கும் மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் காரணமாக முடி வளர்ச்சியைத் தூண்டும். 

 • ஒரு டேபில் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1-2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
 • அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் போட்டு, தலையை ஷவர் கேப் மூலம் மூடிவிடுங்கள். 
 • ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவவும்.
 • சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு இருமுறை முயற்சி செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்