Adani Company : ஆசியாவின் பணக்காரரான கெளதம் அதானி குழுமம் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஹோல்சிம் லிமிடெட் இந்தியாவின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி நிறுவனம்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதானி நிறுவனம் துறைமுகம், ஆற்றல்துறை, நிலக்கரி சுரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை செய்துள்ளது. இந்நிலையில், தற்போது ஹோல்சிம் லிமிட்டெட் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் துறையிலும் களமிறங்கவுள்ளது.
அதானி சிமெண்ட்
கடந்த வருடம் அதானி குழுமம் அதானி சிமெண்டேசன் லிமிட்டெட் மற்றும் அதானி சிமெண்ட் லிமிட்டெட் என்ற 2 துணை நிறுவனங்களை உருவாக்கியது. இதில் அதானி சிமிண்டேஷன் நிறுவனம் 2 சிமெண்ட் யூனிட்டுகளை குஜராத் தாஹேஜ் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரைகார்கில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனம்
இந்நிலையில், ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஏசிசி லிமிட்டெட் மற்றும் அம்புஜா சிமெண்ட் இரண்டையும் இணைத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவாக வாய்ப்புள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…