Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக வங்கி தலைவராக பதவியேற்ற இந்தியர்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. | World Bank President

Gowthami Subramani Updated:
உலக வங்கி தலைவராக பதவியேற்ற இந்தியர்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. | World Bank PresidentRepresentative Image.

உலக வங்கியின் தலைவராக இந்தியர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு, உலக வங்கி குழுமத்தின் தலைவராக டேவிட் மால்பாஸ் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இருப்பினும், டேவிட் மால்பாஸ், பதவிக்காலம் முடியும் முன்பே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்தார். அதன் படி, உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கலுக்கான கடைசி தேதி கடந்த மார்ச் 29 என்று கூறப்பட்டது.

இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா மனு தாக்கல் செய்தார். இவர், சர்வதேச நிதி நிறுவனமான “மாஸ்டர் கார்டு” நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஆவார். ஆனால், இவரைத் தவிர வேறு எவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, அஜய் பங்கா மட்டுமே மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், அஜய் பங்கா அடுத்த ஐந்து ஆண்டுகள் உலக வங்கி தலைவர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்