Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்பிஜி சிலிண்டர்.. தாறுமாறு விலைக் குறைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!!

Sekar July 01, 2022 & 09:15 [IST]
எல்பிஜி சிலிண்டர்.. தாறுமாறு விலைக் குறைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!!Representative Image.

நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், 1 ஜூலை 2022 இன்று முதல் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையைக் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை எல்பிஜி விலை மாற்றத்தை அறிவிக்கின்றன. மாதத்தின் தொடக்கத்தில் ஒரு முறை மற்றும் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு முறை என இருமுறை மாற்றம் செய்யப்படுகிறது..

அந்தவகையில், இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.198 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை டெல்லியில் 2,219 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2,021 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 2,322 ரூபாய்க்கு பதிலாக 2,140 ரூபாயாகவும், மும்பையில் 2,171.50 ரூபாய்க்கு பதிலாக 1,981 ரூபாயாகவும் இருக்கும். 

இதேபோல் சென்னையில் ரூ.2,373க்கு பதிலாக ரூ.2,186 ஆக இனி கமர்சியல் சிலிண்டர் விற்கப்படும்.

முன்னதாக 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ஜூன் 1ஆம் தேதி ரூ.135 குறைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்