Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி வரும் 6 மாதத்திற்கு இப்படித் தான்…! சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் டெக் உலகம்….!

Gowthami Subramani July 14, 2022 & 17:05 [IST]
இனி வரும் 6 மாதத்திற்கு இப்படித் தான்…! சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் டெக் உலகம்….!Representative Image.

சமீபத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உட்பட முன்னனியில் இருக்கக்கூடிய நிறுவனங்களும் பணியாட்களை லே ஆஃப் செய்து வருவதாகக் கேட்டு வருகிறோம். அதற்கு தகுந்தாற்போல, நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து, வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் கூகுள் வெளியிட்ட இந்த அறிவிப்பால், டெக் உலகமே அதிர்ச்சியில் உள்ளது.

பணி நீக்கம்

டெஸ்லா, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வந்துள்ளதைக் குறிப்பிடுகிறது. மேலும், புதிய பணியாளர்களை சேர்ப்பதையும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கூகுள் வெளியிட்ட திடீர் அறிவிப்பால், டெக் உலகமே கதிகலங்கி நிற்கிறது.

கூகுள் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபேட் நிறுவனம், பேஸ்புக், ட்விட்டர், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் எடுத்த முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, சில பிரிவுகளில் இருந்து தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாகும், புதிய ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் மொத்தமாக அனைத்துத் துறையிலும் பணியில் அமர்த்துவதை மெதுவாகத் திட்டமிட்டுள்ளது.

அனைத்திலும் சரிவு

நாட்டில், இது வரை இல்லாத அளவு பெருமளவில் அனைத்துத் துறைகளிலுமே சரிவாகத் தான் உள்ளது. தொழில்நுட்பத் துறையின் பொருளாதார சரிவுகளிலிருந்து கூகுள் ஒப்பிட்டு பார்க்கும் போது, அதிகளவிலான எதிர்ப்புச் சக்தியுடன் தான் இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் ஒரு தசாப்தத்திற்கு முன்னர், நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களை பணியமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியது.

லாபகரமான சூழ்நிலை இல்லை

கூகுளின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்து பணியில் அமர்த்தியது. அதே சமயத்தில், கூகுள் நிறுவனத்தின் லெல்ப் ட்ரைவிங், கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் லாபகரமானதாக இல்லை. இதனால், தற்போதைய ஊழியர்களின் சுமை அதிகமாகக் காணப்படுகிறது.

இவ்வளவு பேரா..?

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் நாள் வரை, கூகுள் நிறுவனம் அதன் தாய் நிறுவனமான ஆல்பெட்-க்கு பணியமர்த்தியது. சமீபத்திய ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் அதிக அளவிலான ஊழியர்களை கிளவுட் பிரிவு மற்றும் மென்பொருள் துறையில் பணியமர்த்தியது.

கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு, பொருளாதார நிலை பெரும் வீழ்ச்சியடைந்தது. இதனால், மே மாதத்தில் ஸ்னாப் நிறுவனங்கள் ஊழியர்கள் பணியமர்த்துவதை மெதுவாகச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 10% வரையிலான நபர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டது.

சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில், கூகுள் 2 ஆவது காலாண்டில் மட்டும் 10,000 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. மேலும், இனி வரும் 6 மாதத்தில் குறிப்பிட்ட முக்கிய பணிகளில் மட்டுமே ஆட்சேர்ப்புப் பணியில் சேர்க்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்