Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் குறைந்தது பணவீக்கம்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

Sekar July 12, 2022 & 19:28 [IST]
இந்தியாவில் குறைந்தது பணவீக்கம்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!Representative Image.

இந்தியாவின் சில்லறை வர்த்தக பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாக குறைந்துள்ளதாக முக்கியமாக உணவுப் பொருட்களின் விலையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை வர்த்தக பணவீக்கம் முன்னதாக மே மாதத்தில் 7.04 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டமாக ஜூன் 2021 இல் 6.26 சதவீதமாகவும் இருந்தது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, ஜூன் 2022 இல் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 7.75 சதவீதமாக இருந்தது. இது முந்தைய மே மாதத்தில் 7.97 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் 4 சதவீதமாக (2 சதவீத ஏற்ற/இறக்க வேறுபாட்டுடன்) இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022 முதல் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை விட அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்