Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்ப்பரேட் வரி வசூல் 34 சதவீதம் உயர்வு.. வருமானவரித்துறை தகவல்!!

Sekar August 13, 2022 & 15:38 [IST]
கார்ப்பரேட் வரி வசூல் 34 சதவீதம் உயர்வு.. வருமானவரித்துறை தகவல்!!Representative Image.

ஏப்ரலில் தொடங்கிய நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானத்தின் மீது வசூலிக்கப்பட்ட வரி 34 சதவீதம் உயர்ந்துள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல்-ஜூலை மாதங்களில் கார்ப்பரேட் வரி வசூல் வளர்ச்சி குறித்து வருமான வரித் துறை ட்வீட் செய்தது. 2019 ஆம் ஆண்டு கார்ப்பரேட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மத்திய அரசின் வருவாய் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இது சமூக நலத் திட்டங்களுக்கான அதன் செலவினங்களை பாதிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த அறிக்கை வந்துள்ளது.

The corporate tax collections during FY 2022-23 (till 31st July, 2022) register a robust growth of 34% over the corporate tax collections in the corresponding period of FY 2021-22. (1/4)@FinMinIndia

— Income Tax India (@IncomeTaxIndia) August 12, 2022

முன்னதாக கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) கார்ப்பரேட் வரி வசூல் ரூ.7.23 லட்சம் கோடியாக இருந்ததாக வரித் துறை கூறியுள்ளது.

2022-23 நிதியாண்டில் (ஜூலை 31, 2022 வரை) கார்ப்பரேட் வரி வசூல், 2021-22 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் கார்ப்பரேட் வரி வசூலை விட 34 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று வரித்துறை குறிப்பிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்