Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

உற்பத்தியை நிறுத்தப் போகும் ஜான்சன் பேபி பவுடர்..! மாறாக கொண்டு வரும் புதிய உற்பத்தி… என்ன தெரியுமா..?

Gowthami Subramani August 12, 2022 & 17:35 [IST]
உற்பத்தியை நிறுத்தப் போகும் ஜான்சன் பேபி பவுடர்..! மாறாக கொண்டு வரும் புதிய உற்பத்தி… என்ன தெரியுமா..?Representative Image.

ஜான்சன் & ஜான்சன் அதனுடைய உற்பத்தியை டால்க் அடிப்படையில் தயாரித்து வரும் பேபி பவுடரை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

குழந்தைகளுக்கான பவுடர் என்றாலே ஜான்சன் பேபி பவுடர் மட்டும் தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஜான்சன் பேபி பவுடரில் குறித்து விமர்சனங்கள் வெளிவந்தது. அதில் குறிப்பிட்டதாவது, டால்கம் அடிப்படையிலான இந்த ஜான்சன் பேபி பவுடரில் அஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும், இதனால், பலருக்குக் கருப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடருக்கு எதிராக ஆயிரக்கணக்காக வழக்குகள் தொடரப்பட்டது.

இதன் அடிப்படையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் உலகளவில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஹெல்த் கேர் பொருள்கள் நிறுவனம் அமெரிக்கா, கனடா என இரு நாடுகளிலும் பேபி பவுடர் விற்பனையை 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியத் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த நிறுவனம் தயாரிக்கப்படும் பேபி பவுடரில் கல்நார் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால், பலர் கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திப்பதாகவும் சுமார் 38,000 வழக்குப் பதிவுகள் இந்த நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படுத்தப்பட்டது.

அதாவது, இந்த நிறுவனம் டால்க் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தும் கல்நார் மாசுபாட்டின் காரணமாக புற்றுநோயை உண்டாக்கியது.

இது குறித்து ஜான்சன் & ஜான்சன் குறிப்பிட்டதாவது, “சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாற்றப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”. மேலும், இந்த மாற்றத்தின் விளைவாக டால்க் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் 2023-ல் உலகளவில் நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. கல்நார் இல்லாத, பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களின் அறிவியல் பகுப்பாய்விற்குப் பின்னர் உறுதியாக நிற்கிறோம் என தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்