Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா உங்க கிட்ட… அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறுது..

Gowthami Subramani September 17, 2022 & 15:45 [IST]
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா உங்க கிட்ட… அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறுது..Representative Image.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வழியாக நடக்கும் ஆன்லைன் மோசடிகள் நடப்பதைத் தவிர்ப்பதற்கு சில புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் முதல் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் வளர வளர, அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஆன்லைன் மூலமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவோர்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதன் படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும் விதமாக, கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் (Card on File Tokenization) என்ற புதிய விதி முறையை வரும் அக்டோபர் 1 ஆம் நாள் முதல் அம்பல்படுத்த உள்ளது.

புதிய விதிமுறைகள்

ஆர்பிஐ அறிவித்துள்ள படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை Tokenization செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த குறிப்பிட்ட கார்டுக்கான CVV எண் காலாவதியாகி விடும்.

இவ்வாறு காலாவதியாகும் வாடிக்கையாளர்களுக்கு, ஆப்களோ, ஆன்லைன் விற்பனை ஸ்டோர்கள் அல்லது இ-காமெர்ஸ் உள்ளிட்டவற்றை சேமித்து வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்கிறது. இந்த நடைமுறைகள் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதலே இது அறிமுகப்படுத்த இருந்த நிலையில், சில நிறுவனங்கள் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் கோரியதன் காரணமாக தற்போது RBI அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கார்டு ஆன் ஃபைல் என்றால் என்ன? (What is Card of Fine Tokenization?)

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் சம்பந்தப்பட்ட CVV எண், காலாவது தேதி உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு பணப்பரிமாற்றம் செய்வதற்குப் பதில், குறிப்பிட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்கு வழங்கப்படக் கூடிய டோக்கன் எண்ணைக் கொண்டு, வணிக நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் ஆப்களில் பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிப்பதாகும்.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, டோக்கனைசேஷன் என்றழைக்கப்படுவது, கார்டு விவரங்களை டோக்கன் என்ற மாற்றுக் குறியீட்டு முறைக்கு மாற்றுவதாகும். இது டோக்கனைசேஷன் கோரிக்கையை செயல்படுத்தக் கூடிய கார்டின் வங்கி அல்லது நிதி நிறுவனம் மற்றும் கார்டு விவரங்களின் கூட்டுத் தொகுப்பாகும்.

வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பா

கிரெடிட், டெபிட் கார்டு குறித்த தகவல்களை வழங்கி ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதைக் காட்டிலும், இந்த டோக்கனைசேஷன் முறை தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இந்த கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் முறை அமல்படுத்தப்பட்டால், பணப்பரிமாற்ற அப்ளிகேஷன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை கிரெடிட், டெபிட் பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த வகையிலும் சேமிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்