Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்களே உஷார்… ஸ்மார்ட் போன் மூலம் வங்கிப் பணத்தைத் திருடும் சோவா வைரஸ்..!

Gowthami Subramani September 16, 2022 & 17:30 [IST]
மக்களே உஷார்… ஸ்மார்ட் போன் மூலம் வங்கிப் பணத்தைத் திருடும் சோவா வைரஸ்..!Representative Image.

ஸ்மார்ட்போன் மூலம், சோவா வைரஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடுவதாக வெளிவந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், இனையதளத்தை அடிப்படையாகக் கொண்ட அதிக அளவிலான ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால், பணப் பரிமாற்றங்கள் மற்றும் இணையதளம் வழியாக வர்த்தகம் உள்ளிட்டவை செய்யப்படுவதும் தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

இதே சமயத்தில், டிஜிட்டல் நவீன மயத்தில் ஆபத்துகள் இருப்பதை பெரும்பாலானோர் அறிந்ததில்லை. தற்போது, சோவா என்ற வைரஸ் நமது அக்கவுண்டிலிருந்து பணத்தைத் திருடுவதாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த வைரஸ் மூலம் சைபர் கிரைம் இந்திய வங்கிகளுக்கு குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சோவா வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை இவர்கள் குறி வைத்துள்ளதாகவும், இந்த வைரஸ் மூலம் ஆன்ட்ராய்டு போன்களில் முக்கிய தகவல்களைத் திருடி விடுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக வங்கிக் கணக்கு எண், வங்கிக் கணக்கில் உள்ள பண இருப்பு உள்ளிட்டவற்றை திருடுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வைரஸ், பணத்தைத் திருடுவதற்கு வங்கி செயலிகள் உட்பட 200க்கும் அதிகமான செயலிகளை குறி வைத்துள்ளது என்று இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்