Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓஹோ டிஜிட்டல் மற்றும் UPI-க்கு இது தான் வித்யாசமா|UPI & Digital Wallet

Priyanka Hochumin Updated:
ஓஹோ டிஜிட்டல் மற்றும் UPI-க்கு இது தான் வித்யாசமா|UPI & Digital Wallet  Representative Image.

நம்முள் பலருக்கு டிஜிட்டல் மற்றும் UPI பணம் பரிவர்த்தனைக்கு இடையே என்ன வித்யாசம் என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த பதிவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் அளித்த தகவல் மூலம் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து படியுங்கள்!

மக்கள் குறைந்த வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் போது தங்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்தனர். ஏனெனில் அப்போது தான் நாம் என்ன, எப்படி, எவ்ளோ செலவு செய்கிறோம் என்று தெரிந்துகொள்வோம். எனவே, அதில் வீண் செலவு இருந்தால் அதனை தவிர்க்கலாம். ஆனால் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் உலகம் மாற மாற நம்முடைய பழக்க வழக்கங்களும் மாறுகின்றனர்.

ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் பணத்தை பெரிய பரிவர்த்தனைகளுக்காக மட்டும் வங்கிகளுக்கு வெளியிட்டது. பின்னர் சோதனை அடிப்படையில் முக்கிய நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்களுக்கு சில்லறை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதித்தது. இது மட்டும் இல்லாமல் யூபிஐ (UPI), ஆர்டிஜிஎஸ் (RTGS), நெஃப்ட் (NEFT) போன்ற தளங்கள் மூலமாகவும் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

அப்படி இதற்கு இடையில் என்ன வித்யாசம்? UPI - பரிவர்த்தனைக்கு வங்கி கணக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் பணம் அனுப்புபவர், பணத்தை பெறுபவர் இருவரின் வங்கி கணக்கு மூலம் தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதே போல் தான் ஆர்டிஜிஎஸ் (RTGS), நெஃப்ட் (NEFT), ஐஎம்பிஎஸ் (IMBS) பரிவர்த்தனை நடைபெறுகிறது. ஆனால் Digital Money - அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வங்கியின் அவசியம் சுத்தமா இல்லை. பணம் அனுப்புனர் மற்றும் பெருநரின் போன் ஒரு வாலட் போல பயன்படுத்தப்படுகிறது. எனவே, பணத்தை மொபைலின் வாலட் பணத்தை அனுப்பிவிடலாம். இது பரிவர்த்தனையை மேலும் எளிமையாக மாற்றுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்