Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?

Priyanka Hochumin Updated:
வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?  Representative Image.

தாங்கள் இளம் வயதில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து பெற்றோர்கள் சொத்து சேர்க்கின்றனர். பின்னர் பிறரை சார்ந்து வாழ ஆரம்பிக்கும் போது நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொத்துக்களை மாற்றி கொடுத்து விடுகின்றனர். அவர்களோ நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெற்றோர்களை பார்த்துக் கொள்ளாமல் அனாதையாக விட்டுவிடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீர்குலைந்து போவது நமக்கு நன்றாக தெரியும். எனவே, தான் இப்படி சொத்துக்களை தரும் போது ஒரு முக்கிய வாக்கியத்தை பத்திரத்தில் சேர்க்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?  Representative Image

பத்திர மாற்றம்

சொத்துக்களை அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி பெயரில் இருந்து மகன்-மகள், பேரன்-பேத்தி-களுக்கு மாற்றும் போது பத்திர செலவு அதிகமாகிறது. எனவே, செலவை குறைக்க gift deed அதாவது தங்கள் சொத்துக்களை அவர்களுக்கு பரிசாக தருவதாக பத்திர பதிவு செய்கின்றனர். இந்த செலவை குறைக்க நினைத்து பலரும் ஏமாந்து தவித்து வருகின்றனர். ஏனென்னில் இப்படி சொத்து பரிசாக கிடைத்த உடன் அவர்களை கவனிக்காமல் அலட்சியப் படுத்துகின்றனர்.

வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?  Representative Image

இதற்கு தீர்வு

அப்படி சொத்துக்களை வாங்கிய பிறகு தங்களின் பிள்ளைகளுக்கு ஒழுங்கா முதியோர்களை கவனிக்காமல் விட்டு விட்டால் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி நீங்கள் நீதிமன்றம் சென்று அந்த சொத்துக்களை திரும்ப பெரும் உரிமையை அளிக்கிறது. இந்த சட்டத்தின் படி தீர்ப்பு கிடைத்த ஒரு உண்மை வழக்கை பற்றிய தகவலை பார்ப்போம்.

வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?  Representative Image

தாயின் கதறல்

குருகிறாமை சேர்ந்த தாய் தன்னுடைய பிள்ளைக்கு சில சொத்துக்களை gift deed பரிசாக அளித்துள்ளார். பின்னர் தன்னுடைய குழந்தைகள் சரியாக கவனிக்காததால் அந்த சொத்துக்களை திரும்ப பெற நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி மே 2018 ஆம் ஆண்டு அந்த பரிசு பத்திரத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிள்ளைகள் இந்த வழக்கை மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் ஓகா கடந்த வாரம் புதன்கிழை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி அமைத்தனர். தாய் அளித்த அந்த பரிசு பத்திரத்தில் அவரின் மூன்று குழந்தைகள் (2-மகள்கள், 1-மகன்) தன்னை கடைசி வரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அந்த பத்திரத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டினார். அதனால் பரிசு பத்திரம் கிடைத்த பிறகு அவர்கள் உங்களை பார்த்துக் கொள்ள எந்த அவசியமும் இல்லை என்றும் கூறினார். எனவே, அந்த பத்திரம் ரத்து தீர்ப்பை மாற்றி அமைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.

வச்சாங்க பாரு ஆப்பு...பிள்ளைகளுக்கு சொத்து தந்தா...பத்திரத்தில் இத கட்டாயம் சேதுங்கை! இல்லைனா நஷ்டம் உங்களுக்குதா?  Representative Image

இனிமே இது கட்டாயம் பண்ணிடுங்க....

அதனால் இனிமே எந்த பெற்றோரும் தங்களின் சொத்துக்களை பரிசாக தங்கள் பிள்ளைகளுக்கு தர விரும்பினால் அந்த பத்திரத்தில் கடைசி வரை தங்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அந்த பத்திரத்தில் தெளிவாக அச்சடிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்