Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

8 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani September 10, 2022 & 12:05 [IST]
8 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று முதல் அமலில் வந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த புதிய மின் கட்டண உயர்வில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

புதிதாக அமல்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணங்கள்

100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றம் இல்லை எனவும், 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள், மின்சார வாரியத்தில் எழுதிக் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்களுக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ.55 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

300 யூனிட் வரை பயன்படுத்துவோர்கள் இரு மாதங்களுக்குக் கூடுதலாக 145 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

400 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 295 ரூபாய் இரு மாதங்களுக்குச் செலுத்துவர்

500 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்கள், இரு மாதங்களுக்கு கூடுதலாக 595 ரூபாயை வசூலிப்பர்.

600 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள், இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து 310 உயர்த்தப்படும்.

700 யூனிட் வரை பயன்படுத்தினால், இரு மாதங்களுக்குக் கூடுதலாக 550 ரூபாய் வசூலிக்கப்படும்.

800 யூனிட் வரை பயன்படுத்தும் போது, இரு மாதங்களுக்குக் கூடுதலாக 790 ரூபாய் செலுத்த வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்