Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை..! நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு….

Gowthami Subramani September 09, 2022 & 17:15 [IST]
கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை..! நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு….Representative Image.

ஆன்லைனில் ஆப் வழியாக கடன் வழங்கும், சட்டவிரோதமன செயலிகள் ஒடுக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஏராளமான வழிமுறைகள் உள்ளன. ஆனால், அவை எந்த வகையில் இருவருக்கும் விளைவுகளைக் கொடுக்காது என்பது தான் முக்கியமாகக் கருதப்படும் ஒன்றாகும். தொழில்நுட்பங்கள் மென்மேலும் வளர, வளர பொதுமக்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களுக்குக் கடன் வழங்குவதற்கென ஒரு சில சட்டவிரோதமான கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இதனை ஒடுக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் கடன் செயலிகள்

தேவைகள் என்பது தீராத ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில், தேவைகளுக்கு அதிகமாகவே தற்போது கடன்களைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு கடன்களைப் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உண்டு. அவ்வாறே, அப்ளிகேஷன்ஸ் மூலம் கடன்களைப் பெறுதல். ஆப்களின் வழியாக கடன்களைத் தரும் அனைத்துச் செயலிகளுமே ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல.

செயலிகள் ஒடுக்க நடவடிக்கை

இவ்வாறு சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சட்ட விரோத கடன் செயலிகளின் காரணமாக பலர் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது குறித்து ஆலோசனை எடுக்கப்பட்ட பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் செயலிகள் மட்டுமே செயல்பட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆப் ஸ்டோர்களில் நீக்க

இவ்வாறு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கப்படாத ஆப்களை ஸ்டோர்களில் இருந்து நீக்குவதற்கு மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் எனவ கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 600-க்கும் அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள் செயல்பாட்டில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சீன பயன்பாடுகள்

இந்த பயன்பாடுகள் எல்லாம் சீன நாட்டினரால் இயக்கப்படுவதாக உள்ளது. அதன் படி, மத்திய நிதியமைச்சர், டிஜிட்டல் தளங்களில் காணப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தார். குறைந்த வருமான உடைய நபர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள், மிரட்டல் போன்ற கொள்ளையடிக்கும் முறைகள் உள்ளிட்டவை அதிகரித்து வருவது குறிப்பிட்டு நிதி அமைச்சர் கவலை தெரிவித்தார்.

விரைவில் அமல்படுத்துதல்

இந்த சட்ட விரோத கடன் ஆப்களினால், பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் சிலர் கடன் வழங்கப்பட்டவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். அதற்கு ஒரு படி மேல், ஆன்லைன் கடன் மோசடியால் திருட்டில் ஈடுபடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாதிருக்க, இந்த செயலிகள் ஒடுக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்