Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிஎஃப் கணக்கு உங்ககிட்ட இருக்கா…! EPFO வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு…!

Gowthami Subramani July 20, 2022 & 12:30 [IST]
பிஎஃப் கணக்கு உங்ககிட்ட இருக்கா…! EPFO வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு…!Representative Image.

மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு பிஃப் தொகை மாதந்தோறும் பிடிக்கப்பட்டு, பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மேலும், EPFO பல்வேறு திட்டத்தில் இதனை முதலீடு செய்யும். இவ்வாறு முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை வட்டியாக அளிக்கும். பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு இதன் மூலம் லாபம் கிடைக்கும்.

EPFO இன்வெஸ்ட்மென்ட்ஸ்

EPFO ஒவ்வொரு மாதமும், பெறப்படும் தொகையை அரசு வைப்பு நிதி, கடன் பத்திரங்கள், மற்றும் அரசு பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பான முதலீட்டு பிரிவில் சேர்க்கும். மேலும், இது பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டில் கடந்த சில வருடங்களாக முதலீட்டுத்தொகை அதிகரித்து காணப்படுகிறது.

உயர்த்துவதற்கான திட்டம்

சம்பளதாரர்களிடமிருந்து PF டெபாசிட்டில் முதலீடுகளை வைப்புத் தொகையாக வைக்கும் போது சம்பளத்தொகையின் 15% வரை பெறப்படும். ஆனால், EPFO தற்போதைய வரம்பான 15%-லிருந்து, 20% வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி, ஜூலை 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் EPFO Trustees கூட்டம் நடைபெற உள்ளது. இதில், EPFO-வின் முதலீட்டை உயர்த்துவதை பரிசீலிக்க ஒப்புதல் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் படி, முதலீட்டை 5% முதல் 50% வரை ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பங்குச்சந்தை எதிர்ப்பு

இந்த முதலீடு தொகையை 20% ஆக உயர்த்துவதற்கு EPFO-ன் ஆலோசனைக் குழுவின் நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது. மேலும், EPFO கடந்த ஆகஸ்ட் மாதம் 15ல் ETF என அழைக்கப்படும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கியது. மேலும், இதன் வைப்புத் தொகையில் 5%ஐ பங்கு இணைக்கப்பட்ட தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு வந்தது. அவ்வாறே, நடப்பு நிதியாண்டில் 15%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த முதலீடுகள் பங்குச் சந்தை செய்வதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன. ஏனெனில், பங்குச் சந்தையின் மூலம் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தைகளில் ஏற்றம், இறக்கம் காணப்படுவதால், ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் இன்னும் சில பேர் இதனை ரிஸ்க் எனவும் கருதுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்