Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அர்னால்டை பின்னுக்குத் தள்ளிய அதானி..! இந்தியாவில் முதலிடம் உலக அளவில் இரண்டாம் இடம்…!

Gowthami Subramani September 16, 2022 & 16:40 [IST]
அர்னால்டை பின்னுக்குத் தள்ளிய அதானி..! இந்தியாவில் முதலிடம் உலக அளவில் இரண்டாம் இடம்…! Representative Image.

சிறிய கால இடைவெளியில், பணக்காரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாம் இடத்திலும் திகழ்பவர் அதானி குழுமத்தின் தலைவரான அதானி.

இன்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிவிப்பின் படி, நிகழ்நேர தரவரிசைப்பட்டியலில், அதானியின் சொத்து மதிப்பு $155.5 பில்லியனைப் பெற்று உலகின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது, $5.2 பில்லியன் அல்லது 3.49% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர், உலக பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த LVMH தலைவர் மற்றும் CEO ஆன, பெர்னார்ட் அர்னால்ட்டை விஞ்சி தற்போது இரண்டாம் இடத்திற்கு முந்தியுள்ளார். அதே சமயம், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கும் எலோன் மஸ்க், $273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டு தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.

கௌதம் அதானியின் வெற்றிக் கதை தெரியுமா உங்களுக்கு?

அதானி குழுமத்தின் நிறுவனங்கள்

விமான நிலையங்கள், துறைமுகங்கள், பசுமை ஆற்றல், தரவு மையங்கள் என ஆறு பொது வர்த்தக நிறுவனங்களில் அதானி பங்குகளின் மதிப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் அதானி அவர்கள், கடந்த பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் பில்லியனராக விளங்கிய முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார்.

அதானி எண்டர்பிரைசஸ்

அதானியின் கூட்டு நிறுவனமாக விளங்கும் அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டது. அதன் படி, நேற்று ஒரு பங்குக்கு $46 உயர்ந்து அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,749.15 ஆக உயர்ந்தது. இவ்வாறு உயர்ந்த சொத்து மதிப்பு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2 மடங்கு அதிகமாகக் கருதப்பட்டது.

இதே போல, அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளும் கடந்த ஆண்டில் 3 மடங்கு உயர்ந்து ரூ.398.4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் புதிய எரிசக்தி நிறுவனமான கிரீன் எனர்ஜியும் கடந்த ஆண்டில் இருமடங்காக உயர்ந்து ரூ.2,343.05 ஆக காணப்பட்டது.

இவரது வணிக விரிவாக்கம், இவரை புது வணிகங்களில் நுழைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வைத்தது. அதன் படி, சுவிஸ் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹோல்சிம் குழுமத்தின் இந்தியப் பிரிவை, அதானி குழுமம் கையகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அதானி குழுமம் இரண்டு பட்டியலிடப்பட்ட சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சலுகைகளுடன் கூடிய பரிவர்த்தனைகள் அதானி இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக மாற்றும் எனவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்