Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

GDP Meaning in Tamil: ஜிடிபி என்பதன் பொருள்…! இதை வைத்து எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்…..

Gowthami Subramani June 03, 2022 & 20:10 [IST]
GDP Meaning in Tamil: ஜிடிபி என்பதன் பொருள்…! இதை வைத்து எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்…..Representative Image.

GDP Meaning in Tamil: சமீபத்தில், நாம் அடிக்கடி வணிகம் தொடர்பான விஷயங்களில் ஜிடிபி என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதே போல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், தற்போதைய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நாம் ஜிடிபி-ஐப் பற்றி அதிக அளவில் கேள்விப்படுகிறோம். இந்தியாவில் ஜிடிபி-யின் வளர்ச்சி விகிதம் சரிந்து கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இனி வரும் காலத்திலும், ஜிடிபி சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளன.

ஜிடிபி என்பதன் பொருள் (GTP Meaning in Tamil)

ஜிடிபி என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது ஒரு நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். அதாவது இதனை Gross Domestic Product என்று கூறுவர். இந்த ஜிடிபி மூலம் ஒரு நாட்டில் பொருளாதாரத்தைக் கணக்கிட முடியும். அதே போல, அந்த நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதாரம் அதிகரித்துள்ளதையும், குறைந்துள்ளதையும் கண்டறிய முடியும் (Full Form of GDP).

இவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதா? வீழ்ச்சியடைந்துள்ளதா என்பதை அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வாயிலாகக் கணக்கிட முடியும். மேலும், பணவீக்கம் மற்றும் பணமதிப்பு எந்த அளவில் குறைந்துள்ளது, அதிகரித்துள்ளது போன்ற விவரங்களைக் கணக்கிட முடியும் (What is Full Form of GDP).

இந்தியாவில் ஜிடிபி

இந்தியாவில் நிதியாண்டு என்பது, ஏப்ரல் மாதம் 1 முதல் மார்ச் 31 வரையிலான கால இடைவெளி ஆகும். இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதாகும் (What is GDP in India). இது விற்பனையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. இதற்கான காரணம் என்னவெனில், உற்பத்த்க்கான செலவைக் கணக்கிட்டுப் பின் அதன் விற்பனை செலவையும் கணக்கிடும் போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இரட்டிப்பாக இருக்கும் (How Does GDP Affect the Economy).

ஜிடிபி வகைகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது ஜிடிபி-யின் இரண்டு வகைகள் உள்ளன (Types of GDP).

நாமினல் ஜிடிபி

ரியல் ஜிடிபி

நாமினல் மற்றும் ரியல் ஜிடிபி இரண்டுமே ஒரு ஆண்டிற்கும், அதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் மற்றொரு ஆண்டிற்கும் இடையே பணமதிப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகும். இதன் தெளிவான விளக்கங்களைக் காண்போம்.

நாமினல் ஜிடிபி

நாமினல் ஜிடிபி-ஐ ஒரு உதாரணத்துடன் காணலாம். 2019 ஆம் ஆண்டில் ஒரு பைக் 90,000-ற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே பைக் அடுத்த ஆண்டான 2020 ஆம் ஆண்டு 4,50,000-க்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு ஒரு ஆண்டிற்கும் அதனையே அடிப்படையாகக் கொண்ட அடுத்த ஆண்டிற்கும் இடையே அதிக அளவு விற்பனை செய்யப்படுவது பொருளாதார மதிப்பு அல்ல. அதாவது பணவீக்கத்தினால் அதன் உற்பத்தியின் விலை உயர்ந்து காணப்பட்டு பைக்கின் விற்பனை விலையும் அதிகரிப்பதாகும். இதனையே நாமினல் ஜிடிபி என்று கூறுவர்.

ரியல் ஜிடிபி

இதுவே உற்பத்தி செய்யப்படும் பைக்கின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். ஆனால், அதனை விற்பனை விலை ரூ.90,000 மட்டுமே இருக்கும். இதனையே பொருளாதார வளர்ச்சி என்று கூறுவர். இந்த தகவல்களின் அடிப்படையிலே ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

ஜிடிபி கணக்கீடுகள்

அதன் படி, இந்திய நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி கீழ்க்கண்டவாறு வகுக்கப்படுகிறது (How is GDP Calculated).

வருமான அமைப்பு

ஒரு நாட்டின் வருமான முறை, உற்பத்தி காரணிகளால் பெறப்பட்ட ஒட்டு மொத்த வருவாயைக் குறிப்பிடுவதாகும் (GDP Calculations in Tamil).

உள்ளீட்டு முறையின் படி ஜிடிபியானது,

GDP = A + T – S

A – காரணி செலவிலான GDP

T – வரிகள்

S – மானியங்கள்

வெளியீடு அமைப்பு

ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பை அளவிடுவது வெளியீடு முறை ஆகும்.

வெளியீட்டு முறையின் படி,

GDP = B – T + S

B – ஜிடிபி-யின் நிலையான விலைகள் அல்லது உண்மையான விலை

T – வரிகள்

S – மானியங்கள்

செலவின அமைப்பு

இதில் ஜிடிபி பின்வருமாறு கணக்கிடப்படுகிறது (What is GDP in Business).

GDP = C + I + G + NX

C – தனிப்பட்ட நுகர்வு செலவு

I – வணிக முதலீடு

G – அரசு செலவு

NX = (X-M) à நிகர ஏற்றுமதி

X – ஏற்றுமதி

M – இறக்குமதி

மேற்கூறிய அனைத்தும் GDP பற்றிய விளக்கங்கள் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்