Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gold Hallmark News Tamil: நகை வாங்கப் போறீங்களா…? ஜூன் 1 முதல் இது கட்டாயம்.... கவனமா இருந்துக்கோங்க…..

Gowthami Subramani May 26, 2022 & 12:20 [IST]
Gold Hallmark News Tamil: நகை வாங்கப் போறீங்களா…? ஜூன் 1 முதல் இது கட்டாயம்.... கவனமா இருந்துக்கோங்க…..Representative Image.

Gold Hallmark News Tamil: இந்திய தர நிர்ணய அமைப்பு நகைப்பிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஹால்மார்க் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் ஜூன் மாதம் 1 ஆம் முதல் அமலுக்கு வர உள்ளது.

இனி இது கட்டாயம்

பிஐஎஸ் என அழைக்கப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மொத்தம்32 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயக்கப்பட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளது (Hallmark Gold Jewellery).

முத்திரை பதித்தவை மட்டுமே

சர்வதேச வர்த்தக அமைப்பாக விளங்கும் WTO, பிஐஎஸ் தரச் சான்றிதழ்களை தங்க நகை ஏற்றுமதி செய்யும் இடங்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அந்த வகையில், இந்த WTO அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதனிடையில், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது (Hall Marking of Gold Jewellery).

எந்த இடங்களில் இது கட்டாயம்

வரும் ஜூன் மாதம் 1 ஆம் நாள் முதல் இத்திட்டத்தைக் கட்டாயம் செய்வதன் மூலம், அதன் இரண்டாம் கட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், இத்திட்டம் 32 மாவட்டங்களிலும் ஜூன் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செயல்படுத்தப்பட்ட தங்க நகைகள் மட்டுமே, இனி விற்பனை செய்யப்படும் (Gold News Latest Update Tamil).

அதற்கான காரணம்

இவ்வாறு முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்வதற்கான காரணம் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். மத்திர அரசினுடைய இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் நாள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதற்கான முழு காரணம் தங்க நகை வர்த்தகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது (Hallmark Gold Latest News).

மூன்று கிரேடுகள்

முதலில், 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடுகளை ஏற்படுவதைத் தவிர்க்க மூன்று கிரேடுகளாக மாறின. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என்ற மூன்று வகையான கிரேடுகளில் மட்டும் தங்க நகை விற்பனை செய்ய முடியும். மேலும், விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் பிஐஎஸ் சான்று ஹால்மார்க் முத்திரை இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை