Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கம் கிராமுக்கு இவ்வளவு சரிவா..? குஷியில் இல்லத்தரசிகள்.

Gowthami Subramani October 20, 2022 & 10:50 [IST]
தங்கம் கிராமுக்கு இவ்வளவு சரிவா..? குஷியில் இல்லத்தரசிகள்.Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்று சரிந்த நிலையில், இன்றும் அதிக அளவில் சரிந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, இந்த வாரம் முழுவதுமே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று சற்று குறைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்றும் குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 20 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.15 குறைந்து, 4,685 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து 37,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,087 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,696 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை, குறைந்து வரும் நிலையில், இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.61.00 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை