Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி… சரிந்த தங்கத்தின் விலை…!

Gowthami Subramani November 03, 2022 & 10:45 [IST]
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி… சரிந்த தங்கத்தின் விலை…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், நவம்பர் 1 ஆம் நாளின் நிலவரப்படியே விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 03 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.4,715 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.208 குறைந்து 37,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,117 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று சரிந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து வெள்ளியின் விலை ரூ.64.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை