Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெண்களுக்குக் குஷியோ குஷி தான்… இன்னைக்கும் தங்கம் விலை சரிவு..!

Gowthami Subramani Updated:
பெண்களுக்குக் குஷியோ குஷி தான்… இன்னைக்கும் தங்கம் விலை சரிவு..!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இண்று குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் ஆனந்தத்தில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, கடந்த வாரம் தொடக்கத்தில் கடும் ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இருப்பினும், கடந்த வாரத்தின் இறுதி தினம் முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து சரிந்து வந்துள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 23 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,905 லிருந்து 4,885 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து 39,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,307-லிருந்து 5,287 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,456-லிருந்து 42,296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை