Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் நிறுவனம் வெளியிட்ட புதிய அச்சுறுத்தல்…! கூகுள்லயே இந்த நிலைமைனா.. மத்த கம்பெனியின் நிலை..?

Gowthami Subramani August 17, 2022 & 12:45 [IST]
கூகுள் நிறுவனம் வெளியிட்ட புதிய அச்சுறுத்தல்…! கூகுள்லயே இந்த நிலைமைனா.. மத்த கம்பெனியின் நிலை..?Representative Image.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் கூகுள், தனது ஊழியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூகுள் பணியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால், கூகுள் நிறுவனம் உட்பட பெரும்பாலான நிறுவனங்கள், வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் பல தரப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன.

தொடர் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள்

கடந்த சில வாரங்களாகவே, தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமான அளவில் பணி நீக்கம் செய்து வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை அறிவித்துள்ளது.

கூகுள் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகுளில் பணியாற்றுபவர்கள் அதிக கவனத்தோடும், கூகுள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு சிறப்பான பணிகளை ஆற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், கடின உழைப்புக்குத் தயாராக இல்லாத நபர்கள், நிறுவனத்தின் தேவையை நிறைவேற்ற முடியாதவர்கள், உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனத்தின் தலைவரான சுந்தர் பிச்சை அவர்கள், வேலை குறைவாக இருக்கிறது. ஆனால், பணி ஊழியர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார். இதனால், வாடிக்கையாளர்களுக்கு உதவக் கூடிய வகையிலும், அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையிலும், கூகுள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு ஊழியர்கள் உழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

கூகுளின் அதிரடி உத்தரவு

இவ்வாறே, கூகுளின் மேல்நிலை அதிகாரிகள், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஊழியர்களுக்குக் கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளனர். ஊழியர்கள், தங்களுடைய செயல்திறனை மேம்படுத்தி நிறுவனம் எதிர்பார்க்கக் கூடியதை கொடுக்கவில்லை எனில், ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்பதாகக் கூறப்படுகிறது.

மற்ற நிறுவனங்களும்

எந்த ஒரு காரணத்தைக் கொண்டும், கூகுள் நிறுவனம் தனது பணி ஊழியர்களை வேலையில் இருந்து நீக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வந்த இந்த அறிவிப்பால், அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே போல, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், அதன் வருவாய் அடிப்படையில் தான் அடுத்தடுத்த திட்டங்களை நிறுவனம் மேற்கொள்ளும். ஆனால், தற்போது பணியில் எந்த வித முன்னேற்றமும் இல்லையெனில், உடனடியாக பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுத்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் குறிப்பாக, கூகுள் கிளவுட் விற்பனை பிரிவுதான், இத்தகைய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூகுள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கணிசமான முறையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்