Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..? முழுத் தகவல்கள் இங்கே…

Gowthami Subramani August 16, 2022 & 15:40 [IST]
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..? முழுத் தகவல்கள் இங்கே…Representative Image.

நவீன டிஜிட்டல் உலகத்தில், எல்லா வகையான செயல்முறைகளும் நவீன முறையில் மாறி வருகின்றன. ஒரு நபரின் அடையாளத்தைக் காணும் வகையில், அனைவருக்கும் தனித்தனியே வழங்கப்பட்ட ஆதார் அட்டை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு துறையாக இருப்பினும், ஆதார் அட்டை என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், அரசு வங்கிக் கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதே போல, வாக்காளர் அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். இந்தப் பதிவில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைப்பது குறித்த வழிமுறைகளைப் பற்றி காண்போம்.

வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முறை

தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலின் மூலம், வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்த படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

படி 1

முதலில் தேசிய வாக்காளர் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://voterportal.eci.gov.in/

படி 2

அந்தப் பக்கத்தில் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள எண் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் உள்நுழைந்து கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும்.

படி 3

பிறகு, அதில் கேட்கப்பட்ட விவரங்களான, மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயர், பயனரின் பெயர், பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

படி 4

பயனர் உள்ளிடப்பட்ட விவரங்கள் அனைத்தும், அரசாங்கத்தின் தரவுத் தளத்துடன் சரியாகப் பொருந்தினால், அதில் Search என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 5

இவ்வாறு செய்த பிறகு, படிவத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் திரையில் காட்டப்படும்.

படி 6

பின், அதன் இடது பக்கத்தில் “Feed Aadhaar No” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 7

அதன் பிறகு, ஆதார் அட்டை, ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்புவதற்காக அந்தப் பக்கம் காண்பிக்கப்படும்.

படி 8

இவ்வாறு அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்ட பிறகு, அதனை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சரிபார்த்த பிறகு, “சமர்ப்பி” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 9

அதன் பிறகு, பயன்பாடு வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது அந்த பக்கத்தில் காண்பிக்கப்படும்.

எஸ்எம்எஸ் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல்

ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை எஸ்எம்எஸ் முறையின் மூலம் இணைக்கலாம்.

படி 1

பயனர்கள், முதலில் தொலைபேசி Text Message பக்கத்தைத் திறக்கவும்.

படி 2

பின், அதில் 166 அல்லது 51969 எண்ணிற்கு SMS அனுப்பவும்.

தொலைபேசி மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல்

தொலைபேசி எண்ணின் மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

  • வாக்காளர் ஐடியுடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு கால் சென்டருக்கு அழைக்கவும்.
  • அதன் படி, வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
  • இதற்கு 1950 என்ற எண்ணிற்கு அழைத்து, ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்கலாம்.
  • இவ்வாறு தொலைபேசி மூலம், இணைப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணைப் பகிர வேண்டும்.

இந்த முறைகளின் மூலம், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எளிமையாக இணைக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Link Voter I'd with Aadhar | Voter Link with Aadhar Online | NVSPportal Aadhaar Linking | How to Link Aadhaar with Voter ID Through Mobile | Voter ID Aadhar Card Link Status Tamilnadu | Voter Card Aadhaar Card Link last date | Voter Card Aadhar Link Tamilnadu | Voter ID Card Download | How to Link Voter ID with Aadhar | How to check Aadhar Card Link with Voter ID | How to Link My Voter ID with Aadhar | How to Link Aadhaar with Voter ID Online | How to Link Aadhaar and Voter ID | How to Link Aadhaar Card to Voter ID Epic


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்