Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

GST Collection May 2022 : 44 சதவீத வளர்ச்சி.. புதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்!!

Sekar June 01, 2022 & 15:52 [IST]
GST Collection May 2022 : 44 சதவீத வளர்ச்சி.. புதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்!!Representative Image.

GST Collection May 2022 : மே மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ரூ.1,40,885 கோடியாக உள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீத வளர்ச்சி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,821 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், மே மாத ஜிஎஸ்டி வசூல் முந்தைய ஏப்ரல் மாத வரலாறு காணாத வசூலான ரூ.1.68 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 16 சதவீதம் குறைவாக உள்ளது. அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.42 லட்சம் கோடியாகவும், பிப்ரவரியில் ரூ.1.33 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்டதில் இருந்து ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியது இது நான்காவது முறையாகவும், மார்ச் 2022க்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் உள்ளது.

"மே 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,40,885 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,036 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 32,001 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 73,345 கோடி (ரூ. 37469 கோடி வசூல் மற்றும் செஸ் 10,502 கோடி” என்று மத்திய நிதியமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலுக்கான வருமானத்தைப் பொறுத்தமட்டில், நிதியாண்டின் முடிவான மார்ச் மாத கணக்கு வழக்குகளை முடிப்பதால் எப்போதும் அதிகமாகவே இருக்கும். மேலும் மே மாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தை விட எப்போதும் குறைவாகவே இருந்து வருகிறது.

இருப்பினும், 2022 மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியிருப்பது ஊக்கமளிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்