Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து உயரும் மாத ஜிஎஸ்டி வசூல்… ஆகஸ்ட் மாதம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani September 01, 2022 & 15:10 [IST]
தொடர்ந்து உயரும் மாத ஜிஎஸ்டி வசூல்… ஆகஸ்ட் மாதம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

மாதந்தோறும், ஜிஎஸ்ட் வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் படி, இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 28% அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசூல் செய்யப்பட்டதை விட 28% அதிகம் என மத்திய நிதியமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது,

CGST – ரூ. 24,710 கோடி,

SGST – ரூ.30,951 கோடி

IGST – ரூ. 77,782 கோடி (இது இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,067 கோடி உட்பட)

Cess – ரூ. 10,168 கோடி (இறக்குமதி மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.1,018 கோடி உட்பட)

இவை அனைத்தும் அடங்கும். மேலும், பொருளாதாரம் மீண்டு வருவதால், இதனுடைய நேர்மறையான தாக்கம் ஜிஎஸ்டி வசூலில் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து ஆறு மாத காலமாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்ததன் படி, ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.1,12,020 கோடி ஆகும். இதனை விட 28% அதிகமாகி, நடப்பாண்டான 2022 ஆம் ஆண்டு ரூ.1.43 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

GST on August Month 2022 | GST Collection Month Wise | GST Collection February 2022 | GST Collection January 2022 State Wise | GST Collection march 2022 | Last Month GST Collection | State Wise GST Collection | GST Collection Year Wise | GST Collection Month Wise chart 2021 22 | August Month GST Collection 2022 Tamil nadu | August Month GST Collection 2022 State Wise | August Month GST Collection 2022 in Tamil | August Month GST Collection 2022 india | GST Collection Month on Month | August GST Due Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்