Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலவச சிலிண்டர் வழங்கும் பாஜக… தேர்தலுக்கு மக்களை கவர முயற்சியா..?

Gowthami Subramani October 18, 2022 & 14:55 [IST]
இலவச சிலிண்டர் வழங்கும் பாஜக… தேர்தலுக்கு மக்களை கவர முயற்சியா..?Representative Image.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் நடைபெறும் நேரத்தில் பாஜக அரசு குறிப்பிட்டுள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் தேர்வு தேர்திகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். ஆனால், இந்த முறை இமாச்சல பிரதேச அரசு தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதே சமயம், தேர்தல் தேதி அறிவிப்பை குஜராத் அரசு ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுதோறும் இரண்டு இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு சிலிண்டர்களை இலவசமாக வழங்கப்படுவதால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.650 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலவச சிலிண்டர் பெறும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் செலவாகும் தொகை ரூ.1700 எனக் கூறப்படுகிறது. அதன் படி, இந்த திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன் பெறுவர் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், பைப் மூலம் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் வாட் வரியைக் குறைக்க உள்ளதாகத் தெர்வித்துள்ளது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள், இல்லத்தரசிகள் போன்றோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதன் படி, இந்த வாட் வரி குறைப்பதன் மூலமாக, இயற்கை எரிவாயுவின் விலை ரூ.6 முதல் ரூ7 வரை குறையும்.

இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், தற்போது இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்களை கவரும் விதமாக அமையும் எனவும் சிலர் கருதுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்