Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுக் கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? | Home Loan Interest Rate

Priyanka Hochumin Updated:
வீட்டுக் கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? | Home Loan Interest RateRepresentative Image.

சொந்த வீடு வாங்க விரும்பும் பலருக்கு அதைப் பற்றிய பல விஷயங்கள் தெரியாமல் இருக்கும். அதில் என்னென்ன வசதி, திட்டங்கள், வட்டி வகைகள், தேவையான ஆவணங்கள் என்று நிறைய இருக்கிறது. ஆனால் அதை பற்றி முழுமையாக கேள்வி பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் நீங்கள் எந்த வங்கி, நிதி நிறுவங்கள்  அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் கேட்பதை தந்து தான் வழக்கம். இப்படி இருப்பதை மாற்றத் தான் இந்த பதிவு. வீட்டுக் கடன் வாங்கும் நாம் அதற்கான வட்டி செலுத்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைப்போம். ஆனால் அதில் பல வகைகள் இருக்கிறது, எது நமக்கு ஏற்றது என்று தெரியாது. அதனை விரிவாக தெரிந்துகொண்டு தீர்மானியுங்கள்.

வீட்டுக் கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? | Home Loan Interest RateRepresentative Image

பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும் போது முழு தொகையும் கடனாக கிடைக்காது. நாம் வீடு கட்ட தேவைப்படும் தொகையில் 20% நாம் முன்பணமாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள தொகை தான் வங்கிகள் தரும், அதற்கு மட்டும் தான் நாம் வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டி இருக்கும். அதில் இன்னும் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

வீட்டுக் கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? | Home Loan Interest RateRepresentative Image

இ.எம்.ஐ | Equated Monthly Installment

நாம் புது வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக கடனாக வாங்கும் தொகை, வட்டி மற்றும் திரும்ப கட்டும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் மாதத் தவணை மதிப்பிடப்படுகிறது. அதைத் தான் சம மாதத் தவணை என்று கூறுகிறோம். வீட்டுக் கடன் வழங்கும் எந்த ஒரு நிறுவனதிற்கும் ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி விட வேண்டும். அப்படி சிறிது நாட்கள் கழித்து மாத தவணை செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் மேலும் வட்டிக்கு வட்டியாகிவிடும்.

இதற்கு என்ன தீர்வு என்றால்? நாம் அதிக முன்பணம் செலுத்தும் பட்சத்தில் வீட்டுக் கடன் குறைவாக கிடைக்கும். எனவே, அதற்கான மாத தவனையும் குறைவாக இருக்கும். இருப்பினும் அந்த தொகையானது (EMI) ஒருவரின் மாத வருமானத்தில் 45% சதவீதத்தை தாண்டாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் ஒருவருக்கு வீட்டுக் கடன் மட்டும் இருக்காது, மாதத்திற்கான குடும்ப செலவு, குழந்தைகளுக்கான படிப்பு செலவு, மருத்துவ செலவு என்று நிறைய உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு மாத தவணை தொகையை செலுத்தவும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? | Home Loan Interest RateRepresentative Image

ப்ரீ இ.எம்.ஐ | Pre EMI

எல்லா வங்கிகள், நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கான தொகையை முழுவதுமாக கொடுப்பதில்லை. நீங்கள் புது வீடு கட்டுகிறீர்கள் அல்லது கட்டப்பிட்டிருக்கும் வீட்டை வாங்குகிறீர்கள் என்றால் அது முழுவதுமாக முடிய 20 மாதங்களுக்கு மேல் ஆகிவிடும். அதனால் மொத்த கடன் தொகையையும் அப்படியே தராமல் 3, 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. ஆக ஒவ்வொரு தவணை உங்களுக்கு வழங்கும் போதும் அதற்கான வட்டியை மட்டும் கட்ட வேண்டும். அது தான் ப்ரீ இ.எம்.ஐ. இந்த வட்டியை கட்டாமல் விட்டு விட்டால், இந்த வட்டியில் வீட்டுக் கடனில் சேர்ந்து விடும். பின்பு மொத்த கடன் தொகை வந்த பிறகு கூடுதல் வட்டி செலுத்தும் நிலை ஏற்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்